விவசாயிகள் – ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தோல்வி போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு!

2 Min Read

புதுடில்லி, பிப். 21- “ஒன்றிய அரசின் பரிந்துரைகளை நிரா கரிக்கிறோம். இன்று முதல் டில்லி நோக்கி முன்னேறி செல் வோம்” என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் ஆணையத்தின் பரிந் துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்.
இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள் ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆ-ம் தேதி முதல் விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

250 விவசாய சங்கங்கள்: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250 விவசாய சங்கங்கள் போராட் டத்தில் பங்கேற்று உள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபில் இருந்து தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் பஞ்சாப்- அரியானா எல்லைப் பகுதி யான ஷம்புவில் தடுத்து வைக்கப் பட்டு உள்ளனர்.
ஒன்றிய அரசு சார்பில் விவ சாய சங்கங்களின் தலைவர் களுடன் கடந்த 18ஆ-ம் தேதி 4 கட்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “விவசாயிகளின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.
மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கிஷான் மஸ் தூர் மோர்ச்சா சங்கத்தின் தலை வர் ஷிரவன் சிங் பாந்தர், பாரதிய கிஷான் சங்கத்தின் ஒருங் கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தலேவால் 19.2.2024 அன்று கூறும்போது, “குறிப்பிட்ட 5 பயிர் களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் கொள் முதல் செய்ய ஒன்றிய அரசு சில பரிந்துரைகளை முன்வைத்தது.

இதை நிராகரிக்கிறோம். புதன்கிழமை (21.2.2024) முதல் டில்லி நோக்கி முன்னேறி செல் வோம்” என்றனர்.
விவசாயிகளை தடுக்க பஞ்சாப் _ அரியாணா எல்லை பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உயர் நீதிமன்றம் கண்டிப்பு: விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப்_அரி யாணா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டு உள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சந்த்வாலியா, நீதிபதி லபிதா பானர்ஜி அமர்வு முன்பு நேற்று (20.2.2024) விசார ணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்த்வாலியா கூறும்போது, “போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் டிராக்டர், டிராலி கள் மூலம் சாலையை ஆக்கிர மிக்கக்கூடாது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஞ்சாப் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *