குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் புலவர் மரு. பரமகுரு படத்திறப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

குன்றக்குடி, ஜன. 14- ஜன.10 புதன்கிழமை மாலை குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தவத்திரு. குன்றக் குடி பொன்னம்பல அடிகளார் மரு. பரமகுரு படத்தை திறந்துவைத்து புகழுரையாற்றினார்கள். அவர் தனது உரையில்:

தந்தை பெரியாருக்கும் குன்றக் குடி அடிகளாருக்கும் இடையில் இருந்த நட்புறவை நினைவு கூர்ந்தார். மேலும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சார்பாக மறைந்த ஆதீனப் புலவர் பரமகுரு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ததையும் குறிப்பிட்டு உரை யாற்றினார்.

கழகத்தின் சார்பில் காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி நினைவுரையாற்றி னார். இந்நிகழ்வில் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிங்கம்புணரி இராம. அருணகிரி. (காங்), சிவ கங்கை குணசேகரன் (வ.கம்யூ), மதுரை “காலேஜ் ஹவுஸ்” அதிபர் மணிமொழியன் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை,யிலிருந்து உலகத் திருக்குறள் பேரவை நிருவாகிகள் பலரும் பங்கேற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *