
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளான 12.06.2026 அன்று காலை 11 மணியளவில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை குழந்தைகள் கல்வி பெறுவது என்பது அரசியலமைப்பு விதிகளின்படி நமது உரிமை என்பதனையும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துவது சட்டப்படி குற்றம் என்றும் உரையாற்றியதோடு ஒரு குழந்தை தொழிலாளர் உருவானால் இந்நாடு ஒரு சாதனையாளரை இழக்கின்றது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றனர். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் தினேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
