மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல் 2ஆம் கட்ட பேச்சில் முடிவு

- Advertisement -

சென்னை, நவ. 26- ‘துாய்மைப் பணியாளர் களுக்கு சென்னை மாநக ராட்சியின் அடையாள அட்டை, உபகரணங்கள் உள்ளிட்ட ஏழு கோரிக் கைகளை நிறைவேற்றி தருவதாக, த.வெ.க.,வைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ மோகன் கூறியுள்ளார்,” என, உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட் சியில் பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு உட்பட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஒப்பந்தப் பணியாளர் களின் போராட்டம், ஆக., 20இல் தொடங்கியது. தொடர்ந்து 16 நாட்கள் நீடித்தது.

த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட் டோர் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து இரண் டாம் கட்டப் பேச்சு, சென்னை கலைவாணர் அரங்கத்தில், 25.11.2026 அன்று மாலை 6:00 மணிக்கு தொடங்கி, இரவு 8:00 மணிக்கு முடிந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநக ராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதியுடன் பேச்சு நடத்தினர்.

கூட்டத்தில், ‘தூய்மைப் பணியாளர்களுக்கு, சென்னை மாநகராட்சி யின் அடையாள அட்டை வழங்க வேண்டும். கழிவு களை அகற்ற இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்’ உட்பட 12 அம்ச கோரிக்கை கள் முன் வைக்கப்பட்டன.

முடிவில், ”தூய்மைப் பணியாளர்களுக்கு அடை யாள அட்டை, மண்ட லங்களில் தேவை யான உபகரணங்கள், பணியின் போது விபத்து, உயிரிழப்பு ஏற்படும் பணி யாளர்களின் குடும்பத்திற்கு உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்,” என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜமோகன் தெரிவித்தார்.

பேச்சுக்கு பின், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி கூறியதாவது:

தூய்மை பணியாளர் களுக்கு, சென்னை மாநக ராட்சியின் அடையாள அட்டை வழங்குவது, பெண் அதிகாரி தலை மையிலான கமிட்டி, பணி யாளருக்கு தேவை யான கையுறை, முககவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதாக கூறியுள் ளனர்.

மூன்றாம் கட்டப் பேச்சு, அடுத்து 10 நாட் களுக்கு நடக்கும் என கூறியுள்ளனர். இதை யடுத்து, முதலமைச் சரை சந்திப்பதற்கான ஏற் பாடுகள் செய்து தரப்படும் என கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *