கல்வி- வேலை வாய்ப்பில் சமூகநீதி (இட ஒதுக்கீடு)-முனைவர் க. அன்பழகன் இயக்குநர், பெரியார் பகுத்தறிவு நூலகம் – ஆய்வகம் மற்றும் ஆவணக் காப்பகம்

11 Min Read
- Advertisement -

தந்தை பெரியார், அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பதவி – பட்டம் – படிப்பு எல்லாம் ஆரியர்களுக்கே என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான திட்டம் தான் வகுப்புவாரி உரிமை  – அதை பெற்றிடத்தான் ‘இடஒதுக்கீடு முறை’ என்று மாநில மற்றும் ஒன்றிய அரசில் வழங்கப்படுகிறது.

இந்த ‘இடஒதுக்கீடு முறை’ வகுப்புவாரியாகக் கணக்கிடப்பட்டு அந்த விகிதாச்சாரத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் என்பதாகும்.

தந்தை பெரியாரின் நோக்கம்!

இம்முறை மூலம் அனைத்து ஜாதியினரும் முன்னேற்றம் அடைவதுடன் முடிவில் எந்த ஜாதியால் மக்களிடம் பிரிவும் பின்னடைவும் ஏற்பட்டதோ, அந்த ஜாதியை ஒழிக்கப்படவும் இம்மாற்றமும் ஒரு காரணமாக அமையும் என்பதே தந்தை  பெரியாரின் நோக்கமாகும்.

சென்னை ராஜதானியில் (தமிழ்நாடு மாநிலம்) தான் நீதிக்கட்சி ‘வகுப்புவாரி உரிமை’ அரசு ஆணையாக 1928இல் நிலை நிறுத்தப்பட்டது. அதற்கான முயற்சி 1921,1922 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டும் நிறைவேறவில்லை. 1928இல் அன்று நீதிக்கட்சி தொடங்கிய அரசு ஆணை இன்று தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு என்கின்ற அளவில் உயர்ந்துள்ளது. இன்னும் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி இடஒதுக்கீட்டின் அளவு உயர வேண்டி இருக்கிறது.

மாநில அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் முதலில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசில் 1993 வரை பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாது இருந்தது. தாழ்த்தப்பட்டோருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% மட்டும் ஒன்றிய அரசில் (ஆக மொத்தம் – 22.5%) இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தந்தை பெரியாரே முன்னோடி!

தமிழ்நாடு மாநிலத்தில் இடஒதுக்கீடு இருப்பது போல் ஒன்றிய அரசிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றுகிறார். அன்றைய கால கட்டத்தில் நீதிக்கட்சிக்குத் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெ டுக்கப்பட்டிருந்தார். இன்றைக்கு ஒன்றிய அரசில் அரசுப் பணியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு தந்தை பெரியாரே முன்னோடி என்று இதன் மூலம் விளங்குகிறது.

அய்ந்து பேர் கொண்ட ஒரு குழு!

தந்தை பெரியாரின் ‘மாநிலம் மட்டுமின்றி ஒன்றிய அரசிலும் இடஒதுக்கீடு தேவை’ என்ற சமூகநீதிக் குரலுக்கு கிடைத்த வெற்றியாக 1977ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மெரார்ஜிதேசாய் இருந்தபோது 20.12.1978 இல் ஒன்றிய அரசில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பீகார் மாநில மேனாள் முதலமைச்சராயிருந்த மாண்புமிகு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் அவர்கள் தலைமையில் அய்ந்து பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தந்த பரிந்துரைதான் ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரை யாகும். மண்டல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் (நடைமுறைப்படுத்தி) வைக்க பெரும் போராட்டம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு
கி. வீரமணி அவர்களாலும், ஒத்த கருத்துள்ள நாடு தழுவிய அளவில் பல அரசியல் கட்சித் தலை வர்களாலும் நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட மண்டல் ஆணையை சட்டமாக்கிட திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி தலைமையில் டில்லியில் இந்திராகாந்தி வீட்டிற்கு முன் 9.8.1984 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டல் பரிந்துரையை சட்டமாக்க போராட்டம் பல நாடு தழுவிய அளவில் ஆண்டுகள் பல நடந்தேறின. இந்திராகாந்தி  அம்மையார் மறைந்தபின் ராஜீவ் காந்தி பிரதமராகியும் சட்டமாகாத நிலை தொடர்ந்தது. மாண்புமிகு வி.பி. சிங்  பிரதமரான பிறகு 7.8.1990 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரை ஒன்றிய அரசால் ஏற்கப்படுகிறது என்று இரு அவையிலும் அறிவித்தார்.

எனினும், நீதிமன்றத் தடைகளை தாண்ட வேண்டிய நிலை – அரசியல் சூழ்ச்சிகள் – ரத யாத்திரை என பல நெருக்கடிகளை தவிடு பொடி யாக்கி மாண்புமிகு சீதாராம் கேசரி பிரதமராக இருந்தபோது 8.9.1993 அன்று ஒன்றிய அரசு மண்டல் பரிந்துரை இன்று முதல் அமல்படுத்துகிறது என்று ஆணையிடப்பட்டது.

திராவிடர் கழகப்பொதுச் செயலாளராக மானமிகு கி.வீரமணி மறுநாளே 09.09.1993 அன்று செய்தியாளர்களுக்கு அந்த பேட்டியில் வருமான வரம்பை நீக்க வேண்டும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று அறிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் தொலைநோக்கு…

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்று சொன்ன வருமான வரம்பை நீக்க வேண்டும் என்பது எவ்வளவு தொலைநோக்கானது என்பதை இப்போது உணர முடிகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் வருமான வரம்புப்படி ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மேல் (தற்போது 8 லட்சம்) இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. இதில் பெற்றோரின்  வருமானம், விவசாயத்தின்மூலம் வரும் வருமானம் சேர்க்கக் கூடாது என்பதுதான் தீர்ப்பு. ஆனால் 14.10.2004 ஒன்றிய அரசின் தவறான விளக்கத்தின் மூலம் மேற்கண்ட பெற்றோர் வருமானமும், விவசாயத்தின் வழி வருமானமும் ஆண்டு வருமானத்துடன் சேர்த்து கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையில் வகுக்கப்பட்ட விதி முறைகளுக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டு, ஆண்டு வருமானம் கணக்கிடப்பட்டு, கடந்த 22 ஆண்டுகளாக (2004 முதல் 2026 வரை) இலட்சக்கணக்கான தகுதியுடைய ஓபிசி இளைஞர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய (இடஒதுக்கீட்டு) வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

14.10.2014 ஒன்றிய அரசின் விளக்கக் கடிதத்தை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பாயம் ஒன்றிய அரசின் விளக்கக் கடிதத்தை ரத்து செய்ததை, உயர்நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்து 14.10.2004 ஒன்றிய அரசின் விளக்கக் கடிதம், 8.9.1993 தேதியிட்ட அலுவலகக் குறிப்பாணைக்கு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கைக்கும் நேரடியாக முரணாக இருப்பதாக 11.3.2026 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திமு.க. மாநிலங்களவை உறுப்பினர்
வழக்குரைஞர் பி.வில்சன்

இத்தீர்ப்பிற்கு பின்பு ஒன்றிய அரசு கேட்ட கால அவகாசம், நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல், அதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் எதையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு வாதாடிய வழக்குரைஞர் திமு.க. மாநிலங்களவை உறுப்பினர்
பி. வில்சன், ‘‘22 ஆண்டு காலமாக ஏற்பட்ட இழப்பிற்கு ஆளானவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கி இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பை நிறைவேற்றிட 8 வார கால இடைவெளியிலும் வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் பி. வில்சன் குறிப்பிடுகையில், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு மைல் கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் முதன்முதல் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1993இல் வழங்கப்பட்ட சமூகநீதி, 2004இல் பாதிப்படையச் செய்யப்பட்டு,மீண்டும் உயிர் பெறுகிறது. அதுவும் 52% மக்களுக்கு 27% மட்டும்தான் இந்த ஒதுக்கீடும், அதற்கும் 22 ஆண்டுகள் குரல் வளை நெறிக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் 8.9.1993 அன்று மண்டல் பரிந்துரையை ஏற்று அன்றைய பிரதமர் மாண்புமிகு நரசிம்ம ராவ் ஆட்சியில், சமூகநீதித் துறை அமைச்சர் மாண்புமிகு சீதாராம் கேசரி ஆணை பிறப்பித்தபோது, வருமான வரம்பு நீக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு
கி. வீரமணி அடுத்த நாளே கூறியதை கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

ஒடுக்கப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியப் பாடம்!

நமது உரிமைகள் எளிதில் கிடைத்துவிடவில்லை; ஓர் அநீதியை அநீதி என்று புரிய வைப்பதற்கு 33 ஆண்டுகளில் பல கட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி வந்துள்ளது.  நீதி ஒருநாளும் தோற்காது என்பதை மீண்டும் இத்தீர்ப்பு  நிரூபித்துள்ளது. சமூகநீதியை பாதுகாக்கும் பணியில் மீண்டும் மீண்டும்  சளைக்காது போரிட வேண்டியுள்ளது என்பதை இதன்மூலம் ஒடுக்கப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியப் பாடமாகும்.

ந்தை பெரியார், அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அனைத்துப் பதவி – பட்டம் – படிப்பு எல்லாம் ஆரியர்களுக்கே என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான திட்டம் தான் வகுப்புவாரி உரிமை  – அதை பெற்றிடத்தான் ‘இடஒதுக்கீடு முறை’ என்று மாநில மற்றும் ஒன்றிய அரசில் வழங்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *