டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை கேட்டறிய திமுக குழு பயணம்! மழையின்மையால் குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு, மேட்டூர் அணை நீர் திறப்பில் தாமதம், காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டத் தவறியது என தவெக அரசைக் குற்றம்சாட்டி, விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதை செய்வதை தடுக்கக் கோரிய வழக்கு – ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிக்கை! பதவி விலகல் மூலம் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கையைத் தடுக்கக் கோரிய பொதுநல வழக்கில், ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
* பாஜகவுடன் பவார் டீலிங்: மகள் சுப்ரியா சுலேவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவி – பாஜகவுடன் சரத்பவார் பேரம் பேசுவதாக தகவல்! தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஆதரவளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு ஈடாக மகள் சுப்ரியா சுலேவுக்கு முதலமைச்சர் பதவியை சரத் பவார் கோரியுள்ளதாக தகவல். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருடன் கமுக்கமாகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தி இந்து:
* மோடி அரசு நாடாளுமன்றத்தின் மாண்பைக் குறைத்து விட்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு! நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்பதைக் கூட அறிவிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம். பிரதமர்–உள்துறை அமைச்சர் கூட்டணி ஏன் இத்தகைய அமைதி காக்கிறது என்றும் கேள்வி.
* மக்களின் ஒத்துழைப்பின்மை – மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் தவிப்பு! சுயக் கணக்கெடுப்பு பணியை முடிப்பதில் களப்பணியா ளர்களுக்கு பல சிக்கல்கள்; சிலர் ஓடிபி (OTP) வழங்க மறுப்பதுடன், வங்கிக் கணக்குகள் குறித்த கேள்விகளிலும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஜாதிப் பிரிவில் பொதுப்பிரிவினர் உடனடியாக பதிலளிக்க, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்ஜாதிப் பெயர்களைத் தெரிவிக்கத் தயங்குவதாக கணக்கெடுப்பாளர் தகவல்.
தி டெலிகிராப்:
* மதுரை நில அளவைக் கல்லின் மீது தீபம் ஏற்றும் சர்ச்சை – விஜய்யின் மதச்சார்பின்மைக்கு சோதனை! உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பு களுக்கு ஊக்கமளித்துள்ள நிலையில், மதுரையில் பதற்றமும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “ஜோதிடர்தான் அவர்களின் கொள்கை வழிகாட்டி” – விஜய்யின் தவெக அரசை விமர்சித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரைப் பெயரளவில் மட்டுமே கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட தவெக, உண்மையில் ஜோதிடரையே கொள்கை வழிகாட்டியாகக் கொண்டுள்ளது என ஸ்டாலின் விமர்சனம். ஆறு மாதங்களில் அனைத்தையும் சீரழிப்போம் என்ற முழக்கத்துடன் செயல்படும் த.வெ.க. அரசியல் மட்டுமல்ல, சமூகத்திற்கும் கேடு விளைவிப்பதாக குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
