பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு மாநில அளவில் முதல் பரிசு

- Advertisement -

சென்னை, நவ. 24- போரூர் சிறீஇராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மருந்தியல் துறை சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான உலக மருந்தாளுநர் நாள் மற்றும் தேசிய மருந்தியல் வாரவிழாவினை முன்னிட்டு மருந்தியல் கல்லூரிகளுக் கிடையேயான மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் 21.11.2026 அன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாட்டி லுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரி களிலிருந்து மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தேசிய மருந்தியல் வாரவிழா போட்டி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஷகிலாபானு ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் முனைவர் சி.விஜயலெட்சுமி மற்றும் முனைவர் திரிஷ்யா நாகராஜ் ஆகியோர் வழிகாட்டுதலில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் இளநிலை மருந்தியல் முதலாம் ஆண்டு மாணவிகள் ஜோசிகா, பிரீத்திகா, பார்கவி, கயல்விழி, மோகனாதேவி, சிவிகா மகாலட்சுமி,, கீர்த்தனா மற்றும் ஹரிணி உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழுவினர் பங்கு கொண்ட தெரு நாடகப்போட்டியில் (Street Play) மாநில அளவில் முதல் பரிசையும் Scitoon என்ற வரைபட போட்டியில் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு மாணவிகள் ஜெயசிறீ, கீர்த்திகா ஆகியோர் ஆறுதல் பரிசினையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பரிசு வென்று சாதனை படைத்த மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *