பெரியார் பெருந்தொண்டர் அய்.இராமச்சந்திரன் போன்றவர்கள் கருப்புச் சட்டைதான் தங்களுக்குச் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம் என்று வாழ்பவர்கள்!
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்!
தந்தை பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுப் பகலவனையும், தலைசிறந்த மனிதாபிமானியையும் உலகம் கண்டதில்லை!
பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்!
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்!
தந்தை பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுப் பகலவனையும், தலைசிறந்த மனிதாபிமானியையும் உலகம் கண்டதில்லை!
பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்!
சென்னை, நவ.23 பெரியார் பெருந்தொண்டர் அய்.இராமச்சந்திரன் போன்றவர்கள் கருப்புச் சட்டைதான் தங்களுக்குச் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம் என்று வாழ்பவர்கள்! அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்! தந்தை பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுப் பகலவனையும், தலைசிறந்த மனிதாபிமானியையும் உலகம் கண்ட தில்லை! பெரியாரை உலகமயமாக்குவோம்! உல கத்தைப் பெரியார் மயமாக்குவோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- பெரியார் பெருந்தொண்டர் அய்.இராமச்சந்திரன் போன்றவர்கள் கருப்புச் சட்டைதான் தங்களுக்குச் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம் என்று வாழ்பவர்கள்! அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்! தந்தை பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுப் பகலவனையும், தலைசிறந்த மனிதாபிமானியையும் உலகம் கண்டதில்லை! பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்!
- அய்.இராமச்சந்திரன் இல்ல மணவிழா!
- மணமக்கள்: உ.இரா. மணிமொழி – அர்ஜுன் மணி
- அனைவரையும், ‘‘வருக! வருக! வருக!’’ என்று வரவேற்கிறேன்!
- பெரியார் பெருந்தொண்டர் தோழர் அய்.இராமச்சந்திரன்!
- மருத்துவர் மானவீரன்
- பெரியார் இன்றைக்கு உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது!
- விஷமப் பிரச்சாரங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன!
- மணவிழா அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தைப் பாருங்கள்!
- எவ்வளவு தந்திரம்! எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்!
- சமூக மாற்றத்திற்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது!
- பெரியார் செய்தார், திராவிட இயக்கம் செய்தது!
- கருப்புச் சட்டைதான் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம்!
- எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது!
- தந்தையை விஞ்சக்கூடியவர் அவரது மகன் மருத்துவர் மானவீரன்!
- இக்குடும்பத்தில் உள்ள பெரியார் பிஞ்சுகளுக்கும் பெயர் சூட்டியது நான்தான்!
- சிக்கனமாக வாழுங்கள்; சிறப்பாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள்!
- விட்டுக்கொடுப்பவர்களுக்குத்தான் பரிசு; வெற்றி பெறுகிறவர்களுக்கு அல்ல!
- இன்றைக்கு அறிவியல் உலகம் வளர்ந்திருக்கிறது!
- நேரில் வந்து வாழ்த்த முடியவில்லை என்ற வருத்தம்தான்!
- விஞ்ஞானத்தின் வளர்ச்சி, பகுத்தறிவின் எடுத்துக்காட்டு, வைதிகத்தின் தோல்வி!
அய்.இராமச்சந்திரன் இல்ல மணவிழா!
நேற்று (22.11.2026) காலை 10 மணிக்கு குற்றாலத்தில் உள்ள ராஜன் மகாலில் அய்.இராமச்சந்தி ரன் – சி.உமா ஆகியோரின் இல்ல மணவிழா நடைபெற்றது. இம்மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொளிமூலம் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:

மணமக்கள்:
உ.இரா. மணிமொழி – அர்ஜுன் மணி
உ.இரா. மணிமொழி – அர்ஜுன் மணி
திராவிடர் கழகத்தின் ஒப்பற்ற கொள்கைச் செல்வமாக விளங்கக்கூடிய, அருமை முதுபெரும் கொள்கையாளர், பேரன்பிற்குரிய தோழர் மானமிகு
அய்.இராமச்சந்திரன் – சி. உமா ஆகியோரின் மகளும், பல் மருத்துவருமான உ.இரா.மணிமொழி அவர்களுக்கும், அதேபோல, சிறப்புமிக்க திருவாளர்கள் சந்தனத்துரை – சித்ராதேவி ஆகியோரின் மகனும், மருத்துவருமான அர்ஜுன் மணி அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்தச் சிறப்பான வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருக்கக்கூடிய, எங்களு டைய சிறப்புமிக்க பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் ஆயுள் உறுப்பினரும், பெருமதிப்பிற்குரியவருமான அய்யா மானமிகு டேவிட் செல்லதுரை அவர்களே!
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்திருக்கக்கூடிய அனைத்துப் பெருமக்களே! கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, இயக்க வீரர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
அனைவரையும், ‘‘வருக! வருக! வருக!’’ என்று வரவேற்கிறேன்!
அனைவரையும் இந்தக் குடும்பத்திற்கு உரியவன் என்ற முறையிலும், நேரில் வந்திருக்க வேண்டியவன் என்ற முறையிலும் வரவேற்கிறேன். தவிர்க்க முடி யாத உடல்நிலைக் காரணமாகவும், மருத்துவரின் அறிவுரையை மீற முடியாத சூழ்நிலையாலும் நேரில் வர இயலாமல் போனதற்கு நானே மிகுந்த வேதனையோடும், வருத்தத்தோடும் இருக்கிறேன். இருந்தாலும், இந்த மணவிழா சிறப்பாக, குறிப்பிட்டபடியே நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் கொண்டவன் நான். காரணம், இது எங்கள் குடும்பம். அந்த வகையில், இந்த மணவிழாவில் உரையாற்றுவதற்கு முன்னால், அனைவரையும், ‘‘வருக! வருக! வருக!’’ என்று வரவேற்கிறேன்.
பெரியார் பெருந்தொண்டர்
தோழர் அய்.இராமச்சந்திரன்!
தோழர் அய்.இராமச்சந்திரன்!
ஏனென்றால், தோழர் அய்.இராமச்சந்திரன் அவர்கள் மாணவப் பருவம் தொட்டு, இளைஞரணியில் தன்னை இணைத்துக்கொண்ட காலம் தொட்டு, ஒரு கட்டுப்பாடான தொண்டர்; தெளிவான கொள்கை உணர்வாளர்; நல்ல பேச்சாளர்; சிறந்த கருத்தாளர். எல்லாவற்றையும்விட, கட்டுப்பாட்டைக் காக்கக்கூடிய ஒரு பெரியார் பெருந்தொண்டர்.
மருத்துவர் மானவீரன்
அவருக்குப் பிறந்த பிள்ளை – அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டது நான்தான். ‘மானவீரன்’ என்று பெயர் வைத்தேன். இன்றைக்கு அந்த மானவீரன், பிரபலமான மருத்துவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்தி ருக்கிறார். அவருடைய வாழ்விணையரும் அதேபோல மிக முக்கியமான, சிறப்புமிக்க மருத்துவர்.
இது ஒரு நல்ல குடும்பம். இது ஒரு சுயமரியாதைக் குடும்பம்.
எல்லாவற்றையும்விட, இவர்களைப் புரிந்து கொண்டு சிறப்பாகத் தங்களுடைய சம்பந்திகளாக ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்கள் சந்தனத்துரை – சித்ராதேவி ஆகியோரைப் பாராட்டுகிறோம். இயக்கத்தின் சார்பில் எங்கள் அன்பையும், வரவேற்பையும் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்கள் எனக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், ஒரு நல்ல பிள்ளையைத் தங்களுடைய குடும்பத்திற்கு மருமகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கொள்கை ரீதியாகவும், மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கக்கூடிய ஒருவரை, இன்றைக்குத் அய்.இராமச்சந்திரன் – சி. உமா ஆகியோர் தங்கள் மகளின் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நல்ல குடும்பத்தோடும், கொள்கைக் குடும்பத்தோ டும் சம்பந்தம் வைத்துக்கொள்வதன் மூலம் நல்லதொரு தேர்வைச் செய்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுவாக, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களு டைய கருத்துகளில் பலர் இங்கு உடன்படாதவர்க ளாக இருப்பார்கள். ஆனால், கொள்கைகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளும்போது, அவர்களுக்குச் சரியான புரிதல் ஏற்படுகிறது.
பெரியார் இன்றைக்கு உலகமயமாகிறார்;
உலகம் பெரியார் மயமாகிறது!
உலகம் பெரியார் மயமாகிறது!
கடவுள் மறுப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும் மட்டுமே வைத்து, அவரைப் பற்றிய ஒரு குறுகிய பார்வையை உருவாக்கிவிட்டார்கள். தந்தை பெரியார் போன்ற ஒரு பகுத்தறிவுப் பகலவனையும், தலைசிறந்த மனிதாபிமானியையும் உலகம் கண்டதில்லை. அதனால்தான் பெரியார் இன்றைக்கு உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது.
விஷமப் பிரச்சாரங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், குடும்பம் குடும்பமாக இந்தக் கொள்கைகள் எப்படிப் போற்றப்பட்டி ருக்கின்றன, பெரியார் என்ன செய்தார், பெரியாரால் என்ன நன்மை கிடைத்தது? என்றெல்லாம் இன்றைக்கும்கூடப் புரிந்துகொள்ளாமல் கேள்வி கேட்கக்கூடிய தலைமுறைகள் இருக்கின்றன. விஷமப் பிரச்சாரங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன.
பெரியார் என்ன செய்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை அள்ளி வைத்து நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இதோ, இந்த மணவிழா, குடும்ப விழா என்று சொல்லக்கூடிய மணிமொழி – அர்ஜுன் மணி ஆகி யோரின் மணவிழா அழைப்பிதழை நான் பார்த்தேன். இதில் பல செய்திகளைச் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. நான் சுருக்கமாகத்தான் பேச முடியும்.
ஒரே ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
மணவிழா அழைப்பிதழின்
கடைசிப் பக்கத்தைப் பாருங்கள்!
கடைசிப் பக்கத்தைப் பாருங்கள்!
பெரியார் என்ன செய்தார் என்றால், இந்த மணவிழா அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தைப் பாருங்கள். ‘‘தங்கள் நல்வரவை இனிதே விரும்பும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், கீழப்பாவூர், சிவனாளனூர், களக்காடு, கடையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த உறவினர்களும், அதேபோல வெளியூர்களில் இருக்கக்கூடியவர்களும் ஒரு பட்டியலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் பல்வேறு கருத்துகளைக் கொண்ட வர்கள் இருப்பார்கள்; கொள்கை மாறுபாடு உடை யவர்களும் இருப்பார்கள். அதேபோல, நம்முடைய மணமகன் அர்ஜுன் மணி அவர்களையும், மணமகள் மணிமொழி அவர்களையும் இணைத்து, அவர்க ளுக்குத் தனியாக ‘‘தங்கள் அன்புள்ள’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரையும் இணைத்து, ‘‘அவ்வண்ணமே விரும்பும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு விரிவாக, பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் அழைப்பிதழை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதாவது, அல்லது வீட்டுக்குச் சென்றாவது, முதலில் அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பெயர்களையும் பாருங்கள். அந்தப் பெயர்களைப் பார்த்தாலே பெரியார் என்ன செய்தார் என்பதற்கு விளக்கம் கிடைத்துவிடும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள செய்திகளே அதற்குச் சான்றாகும்.
எவ்வளவு தந்திரம்!
எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்!
எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்!
ஒரு காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், நாம் படிக்கக் கூடாத ஜாதி என்றாக்கினார்கள். ‘‘உங்களுக்குப் படிப்பு வராது; நீங்கள் மாடு மேய்க்கப் போங்கள், மரமேறுங்கள் அல்லது வேறு பணிகளைச் செய்யுங்கள்’’ என்றெல்லாம் பார்ப்பன ஆசிரியர்கள் நம் பிள்ளைகளை முன்னேற விடாமல் செய்த நிலை இருந்தது.
அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி வந்தாலும், நாம் மருத்துவர்களாக வேண்டும் என்று நினைக்கக்கூட முடியாத நிலை இருந்தது.
காரணம் என்னவென்றால், மருத்துவராக வேண்டு மென்றால் சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருந்தார்கள். சமஸ்கிருதத்தை யார் படிக்கலாம் என்ற கட்டுப்பாடும் இருந்தது. யார் ‘பிராமணர்’களோ, யார் பார்ப்பனர்களோ, அவர்கள்தான் படிக்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டார்கள்.
எனவே, சமஸ்கிருதம் படிக்க நமக்கு உரிமையும் இல்லை; அதைப் படிக்காதவர்களுக்கு மருத்துவக் கல்வியும் இல்லை. எவ்வளவு தந்திரம்! எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்!
சமூக மாற்றத்திற்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது!
அப்படிப்பட்ட நிலையை எதிர்த்துக் கேள்வி கேட்டது திராவிட இயக்கம். நீதிக்கட்சி ஆட்சி, பனகால் அரசர் ஆட்சி ஆகியவை அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தின. அதற்குக் காரணமான சமூக மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பு மிக முக்கியமானது.
அந்தத் தடைகள் நீக்கப்பட்ட உடன்தான், நம்மவர்கள் அனைவரும் கல்வி கற்கத் தொடங்கினார்கள். இன்று இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் இவ்வளவு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அதேபோல, இவ்வளவு மருத்துவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
மணமகனாக இருக்கக்கூடியவரும், மணமகளாக இருக்கக்கூடியவரும் மிகப்பெரிய அளவிற்கு இந்த வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பெரியார் செய்தார், திராவிட இயக்கம் செய்தது!
ஒரு குடும்பம், இரண்டு குடும்பங்கள் என்று அவர்களுடைய உறவினர்களை மட்டும் எடுத்துக் கொண்டால்கூட, இந்த அழைப்பிதழின்படி ஏழு மருத்துவர்கள்; பொறியியல் பட்டதாரிகள் உள்பட 18 பட்டதாரிகள்!
இதுதான் பெரியார் செய்தது. இதுதான் திராவிட இயக்கம் செய்தது. அதனால்தான் இன்றைக்கு நாம் மானவீரர்களாக இருக்கிறோம்.
கருப்புச் சட்டைதான் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம்!
அய்.இராமச்சந்திரன் அவர்கள், இன்றைக்குத் தலைமை தாங்கக்கூடிய அய்யா டேவிட் செல்லதுரை போன்றவர்கள் எல்லாம், இந்த இயக்கத்தின் கருப்புச் சட்டைதான் தங்களுக்குச் சுயமரியாதையையும், வாழ்வையும் அளிக்கக்கூடிய அடையாளம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவேதான், கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் பிரச்சினை. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால், அதையே பெரிதுபடுத்திக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.
சரஸ்வதி பூஜை கொண்டாடும் நாட்டில், சரஸ்வதி பாட்டிக்கு எழுதத் தெரியாது; ஆனால், சரஸ்வதி பெயர்த்தி டாக்டர்; சரஸ்வதி பெயர்த்தி வழக்குரைஞர்; சரஸ்வதி பெயர்த்தி இன்றைக்கு மிகப்பெரிய அள வில் பொறியாளராகவும், நீதிபதியாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது!
இந்தத் தலைமுறை மாற்றம், மனித தர்மம் என்று சொல்லக்கூடிய பழைய ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. அதுதான் சமூகநீதி.
எனவே, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.
தந்தையை விஞ்சக்கூடியவர்
அவரது மகன் மருத்துவர் மானவீரன்!
அவரது மகன் மருத்துவர் மானவீரன்!
அதை உணர்ந்துதான் இவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள். அய்.இராமச்சந்திரன் நல்ல தெளி வான கொள்கையுடையவர். அவரை விஞ்சக்கூடியவர் அவருடைய மகன்.
‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மண்ணுயிர்க்கு எல்லாம் இனிது” என்றார் திரு வள்ளுவர்.
கொள்கையுடைமை — அதுதான் மிக முக்கியம்.
அய்.இராமச்சந்திரன் அவர்களாக இருந்தாலும் சரி, அவருடைய வாழ்விணையர் உமா அவர்களாக இருந்தாலும் சரி அனைவருமே கொள்கை வயப்பட்ட வர்கள்.
கல்லூரியில் படிக்கும்போது தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அழைத்தவர் அவர். பல போராட்டங்களில் களத்தில் நின்று சிறைக்குச் சென்றவர்கள். துணிந்து நின்று, மக்கள் மத்தியில் தங்களுடைய கொள்கைகளை நியாயபூர்வமாக எடுத்துரைக்கக்கூடியவர்கள்.
அதேபோல, மானவீரன் வடபுலத்திற்கெல்லாம் சென்று மிகப்பெரிய அளவில் பல வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்.
இக்குடும்பத்தில் உள்ள பெரியார் பிஞ்சுகளுக்கும் பெயர் சூட்டியது நான்தான்!
எங்களுக்குப் பெருமையாக இருக்கக்கூடிய அளவிற்கு, மானவீரனுக்குப் பெயர் சூட்டியது நான் என்பதைவிட, மானவீரனுக்குப் பெயர் சூட்டியதும், சண்முகப்பிரியா – மானவீரன் ஆகியோர் உருவானதும் மட்டுமல்லாமல், ‘‘பெரியார் பிஞ்சு’’ என்று இந்த அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கக்கூடிய அன்பினி, ஆரழில் என்று பெயர் சூட்டியதும் நான்தான். ஆகவே, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி!
நான் நேரில் வராததால், ஒரு சிறிய தடுமாற்றமும் ஏமாற்றமும் இருக்கலாம். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என்னுடைய உடல் இங்கே இருந்தாலும், உள்ளமும் நினைவும் இந்த மண்ட பத்திற்குள்தான் இருக்கின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சில நேரங்களில் பகுத்தறிவாளர்களாகிய நமக்குத் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. வாழ்க்கை என்பதே எதிர்பாராததை எதிர்பார்ப்பதுதான்.
சிக்கனமாக வாழுங்கள்; சிறப்பாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள்!
எனவே, மணமக்களே! இதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அறிவுரை ஒன்றும் அதிகமாக நான் யாருக்கும் சொல்வதில்லை. ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.
பட்டதாரிகளாக இருக்கிற நீங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவாளர்களாக இருங்கள். அது மிக முக்கியம்.
எங்கே மூடநம்பிக்கை இருக்கிறதோ, அங்கே தன்னம்பிக்கை விடைபெற்றுக்கொள்ளும். எங்கே தன்னம்பிக்கை ஆளுகிறதோ, அங்கே மூடநம்பிக்கை இருக்காது.
அந்த தன்னம்பிக்கை உங்கள் வளர்ச்சியை மேலும் மேலும் பல படிக்கட்டுகளில் உயர்த்தும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி:
‘‘விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை’’ என்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.
தந்தை பெரியார், ‘‘சிக்கனமாக வாழுங்கள்; சிறப்பாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள்’’ என்று வலி யுறுத்தினார். அந்த வாழ்க்கைமுறை மிக முக்கியமானது.
இந்த இரண்டு கருத்துகளையும் கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.
போட்டிகள் வாழ்க்கையில் வரும். விளையாட்டுப் போட்டியில் முதலில் வருபவருக்குப் பரிசு; தேர்தலில் முதலில் வெற்றி பெறுபவருக்குப் பரிசு; தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்குப் பரிசு. இவை அனைத்தும் வெளி உலகத்தில் நடைபெறுபவை.
விட்டுக்கொடுப்பவர்களுக்குத்தான் பரிசு; வெற்றி பெறுகிறவர்களுக்கு அல்ல!
ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் எதிராக இருக்க வேண்டும்.
உங்கள் இருவரில் ஒருவருக்காக இன்னொருவர் யார் விட்டுக்கொடுக்கிறார்களோ, அந்த விட்டுக்கொடுப்ப வர்களுக்குத்தான் பரிசு; வெற்றி பெறுகிறவர்களுக்கு அல்ல.
இதை மனதில் வைத்துக்கொண்டு சிறப்பாக வாழுங்கள்; செம்மையாக வாழுங்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை நெறி என்பது மனிதர்களை உயர்த்தக்கூடியது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த மணமக்களும், இந்தக் குடும்ப மும் விளங்குகிறார்கள்.
பெரியாரை நம்பியவர்கள் கெட்டுப்போவதில்லை; பெரியாரை நம்பாதவர்கள்தான் கெட்டுப்போயி ருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, இந்தக் கொள்கையை மற்றவர்களுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.
இன்றைக்கு அறிவியல் உலகம் வளர்ந்திருக்கிறது!
நான் நேரில் வந்து இதைக் கூறியிருந்தாலும், இன்றைக்கு அறிவியல் உலகம் வளர்ந்திருக்கிறது. இவ்வளவு மந்திரம், தந்திரம் என்று பேசுபவர்கள்கூட இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், அமெரிக்காவில் திருமணத்தை ஏற்பாடு செய்துவிட்டு, இங்கே ஜூம் (Zoom) வழியாகத்தான் நடத்துகிறார்கள்.
ஜூம் (Zoom) என்பது முப்பத்து முக்கோடி கோடி தேவர்களும் கண்டுபிடித்தது அல்ல; அறிவியல் கண்டுபிடித்தது. அதுதான் பகுத்தறிவு; அதைத்தான் இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.
எனவே, அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது நான் நேரில் வந்து சந்திப்பேன். வழக்கமாக இது எங்கள் குடும்பம்.
ஆகவே, அனைவரின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மணமக்களுக்கும், மண மக்களின் பெற்றோர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேசுவதற்கு முன்னால் எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், பேச ஆரம்பித்த உடனேயே உணர்வுகள் தானாக வெளிப்பட்டு, தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
‘‘நேரமாயிற்று, நேரமாயிற்று’’ என்று எனக்குத் தொடர்ந்து கையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்!
ஆகவேதான், மகிழ்ச்சியோடு இருக்கிறோம். உங்களிடம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நேரில் வந்து வாழ்த்த முடியவில்லை என்ற வருத்தம்தான்!
ஒரே ஒரு குறைதான் – நேரில் வந்து வாழ்த்த முடியவில்லை என்பது. அதற்குத்தான் ஜூம் (Zoom) என்ற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இனி வருங்கால உலகத்தில் இந்தப் பயணங்கள் எல்லாம் இல்லாமல்கூடப் போகலாம்.
இரண்டாவதாக, நேரில் வந்துதான் வாழ்த்த வேண்டும் என்பதுகூட ஒரு நவீன மூடநம்பிக்கைதான் என்று அய்யா கூறுவார்.
ஆனால், நேரில் வந்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதே பணியைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்.
உங்களுக்குத் தெரியும், இந்தக் கரோனா காலத்தில் ஜூம் (Zoom) தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்திய இயக்கம் திராவிடர் கழகம்தான். அதற்குப் பிறகுதான் மற்றவர்களெல்லாம் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆகவே, அறிவியல் தொழில்நுட்பம் நமக்குப் பயன்படுகிறது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சி, பகுத்தறிவின் எடுத்துக்காட்டு, வைதிகத்தின் தோல்வி!
எனவே, விஞ்ஞானத்தின் வளர்ச்சி, பகுத்தறிவின் எடுத்துக்காட்டு, வைதிகத்தின் தோல்வி – இவை அனைத்தும் சரியாகப் பொருந்துகின்றன என்று கூறி, மணமக்கள் வாழ்க! சிறப்பாக வாழ்க!
பெரியார் வாழ்க!
பெரியாரை உலகமயமாக்குவோம்! உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்!
மணமக்கள் சிறப்பான வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் பார்க்கலாம், சந்திக்கலாம் என்று கூறி விடைபெறுகிறேன்.
அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துகள். மண மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
நன்றி! வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
