காஞ்சி ‘மகா பெரியவா’வின் வரலாற்றையும், வாழ்ந்துகாட்டிய நெறிகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமாம். அவா உபதேசங்களையும் பின்பற்ற வேண்டுமாம்!
பெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் என்னென்ன ‘அருளு’பதேசம் செய்திருக்கிறார் என்று தெரிய வேண்டுமா?
1932-ஆம் ஆண்டு ஸ்ரீபக்த ஸமாஜம் வெளியிட்ட”வர்ணதர்மம்” நூலில் உள்ள செய்திகளை எழுத்து மாறாமல் அப்படியே தருகிறோம். இந்தக் கருத்துகளைத்தான் பரப்ப வேண்டும்; நிலைநிறுத்த வேண்டும்; நூலகங்களில் கட்டுக்கட்டாக நிரப்ப வேண்டும் என்கிறார்களா என்பதை வாசக நேயர்கள் படித்து உணர்வார்களாக!
வர்ண தர்மம்
(ஸ்ரீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் செய்த உபன்யாஸம்)
முன்னுரை
வர்ண தர்மம் என்ற வாக்யத்திலுள்ள வர்ணம் என்ற சொல்லானது ஜாதி என்பதைக் குறிக்கும். அதற்குரிய தர்மம் வர்ண தர்மம் எனப் பெறும். உலகில் ஸ்தாவரங்கள், விலங்கினங்கள் எனப் பொதுவாக இருப்பினும், அவற்றுள் பல பிரிவையுடைய ஜாதிகள் கடவுளால் படைக்கப் பெற்றுள்ளதையும் காண்கிறோம்.
அந்த அந்த ஜாதியானது அவரவர்களுடைய குணத்தைச் சார்ந்திருப்பினும், அக்குணம் அந்தந்த ஜாதியினுடைய விதையிலே நுண்ணிய தன்மையாக அவரவர்களுடைய கர்ம விபாகத்திற்குத தக்கவாறு கடவுள்களால் அமைக்கப் பெற்றுள்ளது. இவ்விதமுள்ள அமைப்பை மற்ற எவராலும் எளிதில் மாற்றவும் முடியாது.
உதாஹரணமாக, வேம்பு சந்தனமாகாது? புலி பசுவாகுமா? வேம்பின் விதையை வெகுநாள் தேனில் ஊற வைத்து விதைத்தாலும அது தித்திக்கும் பழத்தையுண்டு பண்ணவும் வல்லதோ? முடியாதன்றோ! தவிர மிளகாயும், கரும்பும் ஒரே மண்ணில் முளைத்து, ஒரே ஜலத்தினால் வளர்க்கப்படினும், மிளகாய் காரமாயிருப்பதற்கும், கரும்பு இனிப்பாயிருப்பதற்கும் காரணமாயிருப்பது அவற்றின் விதையிலே நுண்ணியதாய் மறைந்துள்ள குணத்தின் பெருமையே யாகும்.
இவ்விதமே, மனிதர்களுள்ளும் பகவான் அவரவர்களுடைய கர்மென்றும் குணத்தைத் தழுவிப் பிறவிலேயே வெவ்வேறு ஜாதியினரைப் படைத்துள்ளார் என நமது ஸநாதந நூல்கள் கூறுகின்றன. “குலத் தளவே யாகுமாம் குணம்” என்ற மூதுரையும் இக்கருத்தை வலியுறுத்தும்.
கீதையிலும், “ஸத்வம் முதலிய குணங்கள், கர்மங்கள் இவற்றின் வேற்றுமையைப் பொருத்து நான்கு வர்ணங்கள் என்னால் ஸ்ருஷ்டிக்கப் பெற்றன”, எனக் கண்ணன் கூறுகிறார். ஆகவே, ஜாதி என்பது பிறவிலேயே தோன்றுவதன்றி பிறந்த பிறகு தோன்றக் கூடியதல்ல. அது ஏற்படுத்தக் கூடியதுமன்று.
அந்த வர்ணமும், ப்ராஹ்மணத்வம். க்ஷத்ரியத்வம், வைச்யத்வம், சூத்ரத்வம் என நான்கு வகையாகும். வே தத்திலே, நான் முகனுடைய முகத்திலிருந்து அந்தணரும், புஜங்களிலிருந்து க்ஷத்திரியரும், தொடை களிலிருந்து வைச்யரும், பாதங்களிலிருந்து சூத்ரரும் உண்டாயினர் எனச் சொல்லப் பெருகின்றது.
வேதத்தையும், ப்ரஹ்ம ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் அந்தணனாவான். அவனுடைய தர்மம் ப்ராஹ்மண தர்மம் எனப்பெறும். வேதமோதுதல், ஒதுவித்தல், யாகம் செய்தல், செய்வித்தல், தாநம் வாங்கல் என்ற ஆறு தொழில்கள் அந்தணனுடைய தர்மங்களாகும். அவற்றுள் ஓதுவித்தல், யாகம் செய்வித்தல், தாநம் வாங்குதல் இம்மூன்றும் அந்தணர்க்குரிய ஜீவநோபாய தர்மங்களாகும்.
முன் கூறியவைகளே அந்தணனுக்கு முக்கியமாகக் கூறப் பெற்றுள்ளபொழுதிலும் அவற்றினால் ஜீவநம் நடத்த முடியாத கஷ்டகாலத்தில் கைப்பற்றி நடத்த வேண்டிய வேறு சில தொழில் முறைகளும் மநுஸ்ம்ருதியில் சொல்லப் பெற்றுள்ளது. அவை வருமாறு – வேத வித்தையைத் தவிர லௌகிக வித்தைகளினால் ஜீவனம் செய்தல். (1) சிற்பத் தொழில் (2) உத்யோகம் செய்து சம்பளம் வாங்கிப் பிழைத்தல் (3) பிறருக்குத் தொண்டு செய்வது (4) பசுக்களைப் பாலனம் செய்தல் (5) வியாபாரம் செய்தல் (டூ) விவஸாயம் செய்தல் (7) ஸ்வல் பாமகக் கிடைப்பதைக்கொண்டு, சுருக்கமாகச் செலவு செய்து வாழ்நாளை மகிழ்ச்சி யோடு நடத்துவது (8) உபாதாநம் எடுப்பது (9) பணத்கை தர்ம வட்டிக்குக் கொடுத்து ஜீவிப்பது (10) என்ற இந்தப் பத்து வகை களான காரியங்களும் அந்தணர்களுக்கு ஆபத்காலத்தில் உதவக்கூடிய ஜீவித தர்மங்களாகும் இவற்றை நடத்திக்கொண்டு வைதிக தர்மங்களையும் கூடியமட்டில் விடாமல் நடத்தி வருகின்ற அந்தணர்களே இக்கலியில் சிறந்தவர்களாகக் கருதப் பெறுவார்கள். எனவே முற்றிலும், வைதிக தர்மத்தைத் தழுவுகின் றவர்களுடைய சிறப்பையும் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ?
ஆபத்திலிருந்து காப்பவன் க்ஷத்திரியனாவன், வியாபாரத்தின் பொருட்டு தேச ஸஞ்சாரம் செய்பவன் வைசியனாவன். க்ஷத்திரியர்களுக்கும், வைச்யர்களுக்கும் வேத மோதுதல், யாகம் செய்தல். தாநம் கொடுத் தல், என மூன்று தர்மங்கள் விதிக்கப் பெற்றுள்ளன. முற்கூறிய மூன்று வர்ணத்தவர்களுடைய கடமைகள் ஒழுங்கு பெறப் பாடுபட்டு உபகாரம் செய்கிறவன் சூத்ரனாவன். அவனுக்கு வேதமோதக்கூடிய அதி காரமில்லாவிடினும் வேதவேதாந்த தாத்பர்யங்களை அந்தணர் வழியாகவும், புராணங்கள் வாயிலாகவும் தெரிந்துகொள்ள அதிகாரமுண்டு. பெண்களுக்கும் இவ்விதமே அதிகாரம் சொல்லப்பெற்றுள்ளது.
கீதையில், “சமம் தமம். தவம், திரி கரண சுத்தி. பொறுமை நேர்மை. அறிவு, விசேஷ அறிவு, ஆஸ்திக்யம் இவை அந்தணனுடையவும் வீரத்தன்மை, பலம், தைர்யம், ஸாமர்த்தியம் யுத்தத்தில் புறங்காட்டி ஓடாமை தாநம், யாவரையும் அடக்கி ஆளுதல் இவை க்ஷத்ரியனுடையவும், பயிர்த் தொழில், பசுபாலனம், வியாபாரம், இவை வைச்ய னுடையவும், சுச்ரூஷை செய்தல் குத்ரனுடையவும் இயற்கையிலுண்டான கர்மங்கள்” எனச் சொல்லியுள்ளது.
நான்முகனுடைய முகம், புஜங்கள், தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்களுக்கு அந்த அந்த உறுப்புக்களின் கார்யங்களாகிய வேதமோதல், பகைவர்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற காரியங்கள் முறையே விதிக்கப் பெற்றுள்ளன.
அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்களுக்கு நற்கதியும், செய்யாதவர்களுக்கு துர்கதியும சாஸ்திரங்களில் விதித்துள்ளன. மேலெழுந்தவாறு பார்த்தால்அந்தணர்களுக்குரிய தர்மம் ஸுலபமாகவும், பிறருக்குத் தோன்றிடினும். அவற்றை நிறைவேற்றுவதிலுள்ள கஷ்டங்கள் மற்றவர்களுடைய தர்மத்தில் கிடையாது. தனது தர்மத்தை ஒழுங்காக நடத்தும் அந்தணன் அடைகின்ற நற்கதியையே, ஸ்வதர்மத்திலுள்ள மற்ற வகுப்பினரும் அடைகின்றனர்.
ஒரு வகுப்பினர் மிகவும் வருந்தி அடை யும் பலனே பிற வகுப்பினர்களுக்கு எளிதிற் கிடைக்கக்கூடியதாக விதித்துள்ள சாஸ்திரங்கள் அவர்களுக்கே அநுகூலமாயிருக்கும் பொழுது அவற்றைக் கையாளுகின்றவர் மீதும் குறைகூறுதல் மனத்திலுள்ள வேற்றுமையையே வெளிப்படுத்துவதாகும்.
எந்த வகுப்பினராயினும் அவரவர் ஒழுக்கங் களினின்றும் நழுவியவர் அவர்களுள் மிகத் தாழ்ந்தவராகவும், பின்னால் தாழ்ந்த பிறவி பெற வேண்டியவராகவும் ஆவர். மற் றும், அவரவர் ஒழுக்கம் குன்றாதவர் சிறந்த வராக இருப்பதுடன் மேலும் உயர்ந்த பிறவியையும் பெறுவர் என்பது நமது சாஸ்திரங்களின் துணிவு.
இன்னோரன்ன பல கருத்துகளை எளிய முறையிலே எடுத்து விளக்கி மக்கள் தத்தம் தர்மத்தை இயன்ற அளவு கடைப்பிடித்து ஒழுகவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் இரவும் பகலும மக்களின் நற்கதியை நாடிச் சிந்தனை செய்தவண்ணமிருத்து வருகின்ற நடமாடும் தெய்வமாம் நமது காஞ்சீ பரமா சாரியருடைய நன்மொழிகளைக் கொண்டு விளங்கும், இச்சிறிய நூலை நாம் ஒவ்வொருவரும் படித்து. அவருடைய உபதேசத்தைச் சிந்தையில் நிறுத்தி அநுஸந்தானம் செய்து வந்தால், நாம நல்வழிச் செல்ல வழியுண் டாவதோடு,ஆசார்யருடைய ஸத்யஸங்கல்பத்தையும் நிறைவேற்றியவராவோம். அவருடைய பரிபூர்ணமான ஆசியும் நமக்குக் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத்துடன் “நமச்சிவாய பதிகம்” உரையுடன் நூலின் இறுதியில் இணைத்துள்ளது. வாசகர் தினந்தோறும் படித்துப் பொருளுணர்ந்து போற்றி, இன்பம் பயத்துத் திளைப்பார்களாக. மங்கைபாகன் மலரடி சிவம்.
– வாதூல வே.ராமசந்த்ர சர்மா
பக்த ஸமாஜம்
– தொடரும்
