உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு

1 Min Read
- Advertisement -

தஞ்சாவூர், நவ.22 ‘காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்புடையதல்ல’ எனக்கூறி, தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரியில் இருந்து பிலிகுண்டுலு வழியாக, தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய, 11.719 டி.எம்.சி., நீரை கருநாடகா அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில், இரு மனுக்களை தாக்கல் செய்தது.

கருநாடக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கருநாடகா மாநிலத்திலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இருப்பதாகவும், பிலிகுண்டுலு வரை கிடைக்கப்பெற்ற, 483 டி.எம்.சி., நீரில், 404.25 டிஎம்சி நீர், தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று (21.11.2026) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தண்ணீர் இல்லாமலும், மழை இல்லாமலும், டெல்டா மாவட்டங்களில் ஏழு லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

தமிழ்நாடு அரசு, இந்த பயிர்களை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குழுவை வரவழைக்க வேண்டும். மத்திய குழு வந்தால் தான், டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, உரிய நிதியை பெற முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *