சட்டம்- ஒழுங்குக்கு சவக்குழி வெட்டும் வேலை பார்க்கும் த.வெ.க. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

- Advertisement -

 

சென்னை, நவ.21- ‘சட்டம்- ஒழுங்குக்கு சவக்குழி வெட்டும் வேலை பார்க்கும் த.வெ.க. அரசு’ என சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கும் காவல்துறை தலைமை இயக்குநர் விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா முதல்வர்? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் – ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

இனியாவது, பழிபோடும் Tactics-அய்யும், Reels Optics-அய்யும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த முதலமைச்சர் முன் வர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கான இறுதிக்கட்டக் கலந்தாய்வு

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, நவ. 21- சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய இந்திய மருத்துவப் பட்டப்படிப்புகளின் இரண்டாம் கட்ட இறுதி காலியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு நாளை (நவ. 22) முதல் வரும் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவங்கள் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான தகவல் தொகுப்பேடு மற்றும் காலியிட விவரங்களை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2026இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய ஒவ்வொன்றிற்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் மற்றும் கட்டணம்: விண்ணப்பிக்கும் முன் சேர்க்கை விபரங்களை முழுமையாகப் படித்து, தேவையான அசல் சான்றிதழ்களை PDF அல்லது JPEG வடிவில் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டண முன்பணம் ஆகியவற்றை இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.

கலந்தாய்வு அட்டவணை, தகுதிகள் மற்றும் கட்டண விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி இருப்பு வரம்பை
உயர்த்த வேண்டும்!

வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை!

சென்னை, நவ. 21- உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணனுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் நேற்று (20.11.2026) அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அரிசி இருப்பு கட்டுப்பாட்டு அரசாணையில், மொத்த அரிசி வியாபாரிகள் 2 ஆயிரம் டன் வரை இருப்பு வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை வியாபாரிகள், பெரிய மளிகைக் கடைக்காரர்கள் அதிகபட்சம் 8 டன் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என நிர்ணயம் செய்திருப்பது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

ஒரு பெரிய மளிகைக் கடைக்காரர், தனது கடையில் ஏற்கெனவே 3 முதல் 5 டன் வரை அரிசி இருப்பு இருக்கும்போதே, அடுத்த கட்ட ஆர்டர் வழங்குவது வழக்கம். அரிசி ஆலைகள், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து லாரிகள் மூலம் அனுப்பும்போது, ஒரு லாரி லோடு என்பது குறைந்தபட்சம் 10 டன் முதல் 20 டன் வரை அனுப்பப்படுகிறது.

ஏற்கெனவே கடையில் உள்ள 3 முதல் 5 டன் இருப்போடு, புதிதாக வரும் ஒரு லாரி லோடு அரிசியை இறக்கும்போது, மொத்த இருப்பு உடனடியாக 15 முதல் 25 டன்னாக உயர்ந்துவிடுகிறது. அரசின் 8 டன் உச்ச வரம்பால், ஒரு லாரி லோடு சரக்கைக் கூட முழுமையாக இறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, 20 டன் வரை இருப்பு வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *