சவுதி நகரங்கள் மீது ஹவுதிகள் தொடர் தாக்குதல்!

1 Min Read
- Advertisement -

ரியாத், நவ. 21- சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்திய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில், ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவுப் பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில், சவுதி அரேபியாவின் மீதும் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சவுதியின் தலைநகர் ரியாத் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ஹவுதிகள் நேற்று (20.112026) 5 ட்ரோன்கள் மற்றும் 1 பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாகவும், அவை அனைத்தும் இடைமறிக்கப்பட்டு தகர்க்கப்பட்டதாகவும், சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் அறிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, மேலும் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் 13 அவசரகால எச்சரிக்கைகளை சவுதியின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ஹவுதிகள் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, யேமனில் ஹவுதிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகள் மீது சவுதி படைகள் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *