புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து! அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

வாஷிங்டன், ஜூன் 10- அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 1,00,000 டாலர் கட்டணத்தை சட்டவிரோதமானது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஹெச் 1-பி விசாக்களுக்கான கட்டணத்தைப் பெருமளவில் டிரம்ப் உயர்த்தியதை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 தலைமை வழக்குரைஞர்கள் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பை நீதிமன்றம் நேற்று (9.6.2026) வழங்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டு செப்டம்பரில் இந்தக் கட்டணத்தை அறிவித்தார். இது சட்டவிரோதமான வரி என்றும், வரிகளை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை இது பறிப்பதாகும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணம் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அந்தக் கட்டணத்தின் தன்மை அது ஒரு வரி என்பதையே காட்டுகின்றது” என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சொரோகின் குறிப்பிட்டார்.

2026 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவில் பணிபுரிய ஹெச் 1-பி விசாவுக்க்கு விண்ணப்பித்த 2,00,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களுக்கான பரிசீலனையை விரைவுபடுத்த 1,00,000 டாலர் கட்டணம் செலுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவல் வெளியான சில நாள்களிலேயே இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், இக்கட்டணத்தை செலுத்துவோரின் விண்ணப்பங்கள் 15 நாள்களில் பரிசீலிக்கப்படுவதாகவும், சாதாரண விண்ணப்பங்களுக்கும் 7.5 மாதங்கள் வரை பரிசீலிக்க நேரமெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெச் 1 விசா என்பது அமெரிக்காவில் வசிப்பதற்கான தற்காலிக குடியுரிமை கொண்டது. அமெரிக்க நிறுவனங்கள் தனித்திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்த இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டு தோறும் பத்து முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *