கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.9.2026

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் – இந்தியா கூட்டணி வரும் 30ஆம் தேதி சந்திப்பு: கூட்டு நடவடிக்கை குறித்து ஆலோசனை.

* இந்தியா கூட்டணி கட்சிகளான சிவசேனா (UBT), திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக அக்டோபர் 2இல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 2 முதல் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

* எஸ்.அய்.ஆர். மூலம் பாஜக வெற்றி பெற்றதாக மம்தா குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் எஸ்.அய்.ஆர். மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக மம்தா குற்றச்சாட்டு. 93 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் வாக்காளர் பட்டியலில் முறைகேடு ஏற்பட்டதாகவும் அவர் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எஸ்.அய்.ஆர். தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தெளிவற்றதாகவும், ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் முயற்சியாகவும் உள்ளது என காங்கிரஸ் விமர்சனம்.  தேர்தல் ஆணையத்தின் நோக்கம், நேர்மை, நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகள் எழுவதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் என்னை வற்புறுத்தினார்: கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் பரபரப்பு தகவல்

தி இந்து:

* ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதில் இரண்டரை மாதம் வாய்தா வாங்கி காப்பாற்றியது தவெக அரசு. ஆனால் பச்சை பொய் சொல்கிறார். மக்களிடம் அனுதாபம் பெற நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். உண்மையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *