கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கள், சென்னை:

* நியாயமான தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு – கனிமொழி! நியாயமான தொகுதி மறுவரையறையை திமுக ஆதரிக்கும் எனத் தெரிவித்த கனிமொழி, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படாததால் அதன் விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

* கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது எப்.அய்.ஆர். பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு! பெண் ஒருவருக்கு ஆபாச மற்றும் பாலியல் தொல்லை தரும் வகையில் வாட்ஸ் அப் செய்திகள் அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் வேல் விஸ்வேஷ் மீது புகார்; காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு – சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு! டெக்கான் கிரானிக்கிள் தலையங்க செய்தி:குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற உத்தரவும், குஜராத்தில் சிலர் மீண்டும் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதும் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக தலையங்கம் விமர்சிக்கிறது.

* ஜென்சி இளைஞர்களை வேலையில் தக்க வைத்துக் கொள்வதில் நிறுவனங்கள் சிரமம் – 68% பேர் பணியை விட்டு வெளியேறுகின்றனர்! வேலை குறித்த எதிர்பார்ப்புகளுக்கும் நிறுவனங்களின் நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடு, ஊதியம் மட்டுமின்றி நெகிழ்வான வேலைச்சூழல், அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை இளைஞர்கள் வேலையை விட்டு விலகக் காரணங்களாக உள்ளன.

* அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் கருப்பின பேரவைத் தலைவராக ஹக்கீம் ஜெப்ரிஸை நிறுத்த ஜனநாயகக் கட்சி முடிவு! இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினர், பிரதிநிதிகள் சபையின் தலைவராக ஹக்கீம் ஜெப்ரிஸை தேர்வு செய்ய முன்மொழிந்துள்ளனர்; இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின பேரவைத் தலைவராக அவர் உருவாக வாய்ப்புள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்கிறது – அமெரிக்காவில் ராகுல் காந்தி; கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் முறையை சீரமைப்பதே மிக முக்கியப் பணி என்றும், தேர்தல் முறைகேடுகளுக்கு போதிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 200 இடங்கள் கேட்ட காங்கிரசுக்கு, 25 இடங்களை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி திட்டம்.: உத்தரப் பிரதேசத் தேர்தல் தொகுதிப் பங்கீடு: இது சமாஜ்வாதி கட்சியின் ஆரம்பகட்ட முன்மொழிவாக இருக்கலாம் என்றும், கவுரவமான எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெற காங்கிரஸ் கடுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ரா முன்னாள் தலைவர் மற்றும் அஜித் தோவலுக்கு அழைப்பாணை வழங்க இந்திய நீதிமன்றங்களின் உதவியை நாடியது அமெரிக்க நீதிமன்றம்! தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா முன்னாள் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கான அழைப்பாணை இந்திய நீதிமன்றங்கள் மூலம் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ (SFJ) நிறுவநர் குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்த சிவில் வழக்கில், நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி கேத்தரின் போல்க் பெய்லா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *