ஆசிரியர் விடையளிக்கிறார்

- Advertisement -

கேள்வி 1: “அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தமிழ்நாட்டின் மகா பெரியவர்களாக  இருக்கிறார்கள்” என்று கூறி, நீதிபதி சுவாமிநாதனுக்குப் பதிலடி தந்துள்ளாரே… மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். அது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 1: மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர், கொள்கை வீரர், தோழர் சு.வெங்கடேசன் எதைச் சொன்னாலும் சரியாகவே, உண்மையைப் பேசுபவர்! போதுமா?

  • • •

கேள்வி 2: “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு ஆட்சிகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டது; தற்போது த.வெ.க. ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை; நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் இனி ஒருபோதும் தி.மு.க. ஆட்சிக்கு வராது” என்று தி.மு.க.வால் வளர்ந்த திருவாளர் வைகோ பேட்டி அளித்துள்ளாரே? தங்களின் கருத்துரை என்ன?

– குடந்தை க.குருசாமி

பதில் 2: சகோதரர் வைகோ கடந்த காலங்களில் நடந்து வந்த பல்வேறு ஆட்சிகளைப் பற்றி அவர் கூறிய பல நிலைப்பாட்டு மாறுதல்களைத் தொகுத்துப் பாருங்கள். அதுவே உங்கள் கேள்விக்குத் தெளிவான பதிலாக அமையும்!

  • • •

கேள்வி 3: விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்குத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விமான நிலைய ஆணைய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனரே… பலனளிக்குமா?

– பெ.சின்னசாமி, பெருமாள்புதூர்

பதில் 3: உடனடியாகப் பலன் அளிக்கும் என்பது உறுதி இல்லை என்றாலும், ஓர் உண்மை இத்தகவலில் அடங்கியுள்ளது. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் முறையிட்டால் அங்கு நீதி, நியாயம், தீர்வு கிடைக்கும் என்று ஆணைய ஊழியர்களைப் போலவே பலரும் அவரிடம் அபரிமித நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது புரிகிறதல்லவா?

  • • •

கேள்வி 4: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படுமா?

– வல்லரசு, சின்னாளப்பட்டி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 4: ‘ஆஸ்தான ஜோசியரை’ அல்லவா கேட்டிருக்க வேண்டும்; என்னிடம் கேட்கிறீர்களே!

  • • •

கேள்வி 5: மக்கள் வரிப் பணத்தில் டில்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் மேகதாது அணை குறித்து ராகுல்காந்தியிடமும், கருநாடக முதலமைச்சரிடமும் பேசாதது ஏன்?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 5: மேற்கண்ட பதிலே இதற்கும் பதிலாகும்! சரிதானே?

  • • •

கேள்வி 6: மழைக்காலங்களில் கூட ஒதுங்கிட இடமின்றித் தவிக்கும் தங்களுக்கு வீடு, மனைகள் கேட்டு – தூய்மைப் பணியாளர்கள் வைத்துள்ள கோரிக்கைக்கு த.வெ.க. அரசு செவிசாய்க்குமா?

– பா.முத்தழகன், வெங்கல்

பதில் 6: பொறுத்திருந்து பார்ப்போம்!

  • • •

கேள்வி 7: மலேசியத் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்க அனுமதி மறுத்துள்ள ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாட்டின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்யும் அளவுக்குள்ள வெறுப்பிற்குக் காரணம் என்ன?

– மா.செங்குட்டுவன், செனாய் நகர், சென்னை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 7: ‘ஆரிய மாயை’யின் அட்டகாசம். “திராவிட நாகரிகம் வேதகால நாகரிகத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் மூத்தது” என்ற பேருண்மையை உலகமும், வரலாற்றாளர்களும் புரிந்துகொள்ளக் கூடாது என்ற சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். – முயற்சிகளே காரணம்!

  • • •

கேள்வி 8: ‘க் வாட்’ தலைவர்கள் கூட்டத்தில் “தலைசிறந்த தலைவர் மோடி” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளாரே, பொருத்தம் உண்டா?

– பொ.அறிவன், சென்னை- 99

பதில் 8: பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டுவதும், டிரம்பை மோடி பாராட்டுவதும்தான் விசித்திரமான ‘தமாஷ்’கள். இக் கால ‘மீயுச்சுவல் பம்ப்’ மிஷன்கள் போலும்!

  • • •

கேள்வி 9: “மேகதாது அணைத் திட்டத்தை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வியப்புத் தெரிவித்துள்ளாரே?

– ப.செந்தமிழ்தாசன், பாரதி நகர், சென்னை-38

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 9: பாவம், பரிதாபத்திற்குரிய கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு மேகதாதுப் பிரச்சினையில் எதுவுமே புரியவில்லை என்பதால் இது புதிதல்லவே!

  • • •

கேள்வி 10: மீண்டும் ‘சபரிமலை சீசன்’ தொடங்கி விட்டதே…?

– எ.மூர்த்தி, சென்னை – 82

பதில் 10: நல்ல பக்தி வியாபாரம்! முன்பு தங்கத்தகடுகள்; அடுத்து என்னவோ? சரணம் அய்யப்பா?!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *