பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் தரம் மற்றும் நிர்வாகம் குறித்துப் பல்வேறு செய்திகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அரசு விழாக்களுக்கு ஒதுக்கப்படும் பெருந்தொகைக்கும், ஏழை எளிய மாணவர்களின் அடிப்படை ஊட்டச்சத்துத் தேவைகளுக்கும் இடையிலான கடுமையான வேறுபாடுகள் உள்ளது.

உத்தரப் பிரதேசம்
2026 ஆண்டு அயோத்தியில் சராயு நதிக்கரையில் தீப உற்சவம் என்னும் தீபாவளி நாள் விளக்கு ஏற்றுவதற்கு அரசு செலவழித்த தொகை 150 கோடி ரூபாய்.
உத்தரப் பிரதேசம் சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட தொகை தான் மேலே குறிப்பிட்ட ரூ.150 கோடி. இதற்கு எண்ணெய், விளக்கு, அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவைகள் இந்த ரூ 150 கோடியில் அடங்கும்.
ஆனால், அந்த மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு என்ற பெயரில் கொடுக்கப்படும் உணவுகளை மாடுகூட சாப்பிட முடியாதது போல் இருக்கும்!
பல மாவட்டங்களில் விடுதிகளில் மீதமாகும் ரொட்டிகளை வாங்கி மறுநாள் குழந்தைகளுக்கு கொடுப்பதாக புகார்கள் வருகிறது. அந்த ரொட்டிக்கு உப்பும் சுடுதண்ணீரும் தருகின்றனர். சுடு தண்ணீரில் ரொட்டியை நனைத்துக்கொண்டு உப்பைத் தொட்டு சாப்பிடவேண்டும்.
10 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடபெறுகிறது.
2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச ஹரிம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவில் காய்ந்த ரோட்டியும் உப்பும் தரும் செய்தியை வெளியிட்ட யுடூபரை தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த்து பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் பினை மறுத்த நிலையில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற பிறகு அந்த ஊடகவியாளருக்கு பினை கிடைத்தது.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் லால்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அவர்களின் புத்தங்களைக் கொண்டுவந்து அதில் ரொட்டியை வாங்கிச் சாப்பிடுகின்றனர். அந்த ரொட்டிக்கு உள்ளே இரண்டு மிளகாய், ஒரு வெங்காயம் தருகிறார்கள். இதுதான் மதிய உணவு!
மத்தியப் பிரதேசத் தில் 30 ஆண்டுகளாக பா.ஜ.க. தான் ஆட்சியில் உள்ளது.
பீகார்
பீகாரில் சுகாதாரமற்ற மதிய உணவு சாப்பிட்ட 64 பேர் கடுமையான உடல் நிலை பாதிப்பால் உள் சிகிச்சைக்காக தலைநகர் பாட்னா அழைத்துச் செல்லப்பட்டனர். மதிய உணவில் கழிவு நீர் கலந்ததால் இந்த கொடூரம் நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.
மதிய உணவில் கழிவு நீர் எப்படி கலக்கும் என்றால் வேகவைத்த பருப்பை தண்ணீரில் கரைத்துக் கொடுப்பார்கள். இதற்காக அருகில் உள்ள ஓடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கலப்பார்கள்.
ஓடைகளில் பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீர்தான் ஓடிக்கொண்டு இருக்கும். அதாவது சாக்கடையை குழம்போடு மனசாட்சி இல்லாமல் பிள்ளைகளுக்கு கலந்து கொடுத்துள்ளனர்.
இதை அரசு மறுத்துள்ளது. இது தொடர்பான செய்திகள் ஆதாரமற்றவை என்று கூறிவிட்டது.
இந்த நிலையில் மீண்டும் அதே பீகாரில் உப்பிற்குப் பதில் சலவைத் தூளைச் சேர்த்துள்ளனர். நாளந்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. 270 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.
ஒடிசா
ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கும் முதல் முறையாக மதிய உணவில் பருப்பும், காய்கறியும் காணாமல் போய் சுடுநீரோடு உப்பும், உருளைக்கிழங்கு துண்டுகளும் வழங்கப்படுகின்றன.
நாட்டில் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் எதிர்காலம் பற்றி பா.ஜ.க.வுக்குள்ள அக்கறை இதுதான்!
