கோவை, நவ.20- கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம், அண்ணாநகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான இடுகாடு, கிணத்துக்கடவு நகரில் செக்போஸ்ட் (முன்பு வருவாய்த்துறை சோதனைச்சாவடி இருந்த இடம்) என்ற பகுதியில் அமைந்துள்ளது.
மொத்தம் 84 சென்ட் இடம் ஆதி திராவிடர்களுக்கான இடுகாடு (ஹரிஜன மயானம்) மற்றும் வண்டிப்பாதை என்று, வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான இடுகாட்டை 10 சென்ட் இடமாகக் குறுக்கி, மீதமுள்ள இடத்தில் 6 அடியாக இருந்த சாலையை விரிவாக்கம் செய்து, பிற பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அருந்ததிய மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் புதைத்த இடத்திலேயே மீண்டும் உடல்களைப் புதைக்க வேண்டியிருப்பதாகவும் தங்களு டைய இடுகாட்டுக்கான இடத்தை முழுமையாக மீட்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்றும் இவர்கள் கோருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கிணத்துக்கடவில் கடந்த நவம்பர்
18-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைக்க வேண்டிய அவலம் இடுகாடு வசதி வேண்டி மக்கள் போராட்டம்!
Leave a Comment
