ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட எட்டு விசைப் படகுகளை மீட்கக்கோரி காசிமேடு மீனவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வேலை நிறுத்தம்

- Advertisement -

சென்னை, நவ. 20- ‘முரசு’ புயலில் சிக்கி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, 20 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க கோரி, காசிமேடு துறைமுக வளாகத்தில், கருப்புக் கொடி கட்டி, மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, அக்., 29ஆம் தேதி, ஓட்டுநர் சூர்யா தலைமையில், விசைப்படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒன்பது பேர், நவ., 3இல், ஆந்திரா அருகே, முரசு புயலில் சிக்கி பலியாகினார். அவர்கள் குடும்பத்தினருக்கு வழங் கப்பட்ட நிவாரணம், போதுமானதல்ல. தலா, 20 லட்சம் வழங்க வேண்டும்.
ஆந்திராவில், எட்டு விசைப்படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் கடந்து விட்டன. உடனடியாக படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை பிடிக் கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ‘முரசு’ புயலால் பாதித்த, விசைப்படகு உரிமையாளருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று (19.11,2026) காசிமேடு துறைமுக வளாகம், மார்க்கெட் பகுதிகளில் கருப்புக் கொடி கட்டி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.
காலவரையற்ற பொது வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகைப் போரட் டத்தில் ஈடுபடுவதாக, சென்னை, காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *