தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
தஞ்சை மாநகராட்சி மேயர், அறக்கட்டளைத் தலைவர் பங்கேற்று கலவையைத் தூவி, பணியை தொடங்கி வைத்தனர்
உரத்தநாடு நவ.19 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் உரத்தநாட்டில் கட்டப்படவுள்ள பெரியார் வளாகம் மற்றும் படிப்பகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களை உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் கட்டட அடிக்கல் நாட்டு விழாவின் கல்வெட்டைத் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்துச் சிமெண்ட் கலவையை எடுத்துத் தூவினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் ப.சீதாராமன், திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திமுக முன்னோடிகள், திராவிடர் கழக முன்னோடிகள் ஆகியோர் சிமெண்ட் கலவையை எடுத்துத் தூவினார்கள். திட்ட இயக்குநர், முனைவர் உ.பர்வீன் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் வளாகம் மற்றும் படிப்பகத்திற்கான அடிக்கல்லை நாட்டி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார். அவர் தம் உரையில், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் ஆகியோரின் அருட் கொடையால் உருவாக்கப்பட்டதுதான் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம். இந்நிறுவனம் ஆரம்பம் முதலே பல இன்னல்களை தாண்டி ‘பெரியார் நாடு’ என்றழைக்கப்படும் உரத்தநாட்டில் பெரியார் வளாகம் மற்றும் படிப்பகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியினை அடைகின்றேன். ஜாதி மதப்பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டு இவ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. உலகளவில் நமது பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களும் இருக்கின்றார்கள். சமூக நீதி காத்த வீரங்கனை ஜெயலலிதா அவர்களை அழைத்து பெரியார் கணினிக் கல்லூரியினை உரத்தநாட்டில் தொடங்கினோம். மேலும் திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் கை.முகிலனின் தந்தையார் கை.இ.கைலாசமுத்து (சர்வேயர்) திருச்சியில் தந்தை பெரியாரைச் சந்தித்து ‘‘உரத்தநாட்டில் இடம் ஒன்று விலைக்கு வருகிறது அதனை வாங்கலாமா?’’ என்று தந்தை பெரியாரிடம் கேட்டபோது, அவரும் ஒப்புதல் அளித்த பின்னர் தந்தை பெரியார் அவர்கள் இடம் வாங்குவதற்கு ஒரு தொகையினைத் திராவிடர் கழகத் தொண் டர்களின் அன்பளிப்பை பெற்றுக்கொண்டு இக் கட்டடம் உருவாக்கப்பட்டது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அடித்தளத்தில் 1,330 சதுர மீட்டரில் கார் மற்றும் இரண்டு சக்கரவாகனம் நிறுத்துவதற்கான வசதிகளும், தரைத் தளத்தில் 1250 சதுர மீட்டரில் கடைகளும் ஒரு படிப்பகமும், முதல் தளத்தில் 1330 சதுர மீட்டரில் கடைகளும் ஒரு கூட்ட அரங்கமும், இரண்டாம் தளத்தில் 1330 சதுர மீட்டரில் கடைகளும், மூன்றாம் தளத்தில் 85.சதுர மீட்டரில் தலைமை அறை, மொத்தம் 5,355 சதுர மீட்டரில் அமைய இருக்கிறது. இதனுடைய மொத்த மதிப்பு 18 கோடி ஆகும். செப்டம்பர் 2027ஆம் ஆண்டு (பவள விழாவில்) இத்திட்டம் நிறைவடையும்.
இந்நிகழ்வில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் வெங்கட்ட சுப்ரமணியன், உரத்தநாடு பேரூராட்சித் தலைவர் மா.சேகர், உரத்தநாடு முன்னாள் பேரூராட்சி தலைவர் ஷேக்தாவுது, திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிடக் கதிரவன், மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கார்த்திகேயன் மற்றும் ச.ரமேஷ்குமார், திமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், திராவிடர் கழகத் தஞ்சை மாவட்டத் தலைவர் ச.தமிழ்செல்வன், செயலாளர் கருவிழிக்காடு சுப்ரமணியம், தஞ்சை மாநகர் தலைவர் வீரக்குமார், மாவட்டக் காப்பாளர்கள் அய்யனார், முகிலன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாநில கலைத்துறைச் செயலாளர் சித்தார்த்தன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகச் மாநில செயலாளர் இராமகிருஷ்ணன், இளைஞரணி துணைச்செயலாளர் வெற்றிக்குமார், விவசாயத் தொழிலாளர் அணி மாநில துணைச்செயலாளர் அருணகிரி, உரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் அ.சுப்ரமணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா,துரைராசு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர், த.செகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரஞ்சித், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் அழகிரிசாமி, ஊடக மாவட்ட துணைத்தலைவர் நரேந்திரன், பேரூராட்சி உறுப்பினர் கமல கண்ணன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி இரவி, பெரியார் பொறியியல் ஆலோசனை மய்யத்தின் பொறியாளர்கள் செந்தமிழ்குமார், காசி, ரமேஷ்குமார், மணிகண்டன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
பெரியார் வளாகம் உருவாவதற்கு உழைத்தவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, நிறைவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி யுரையாற்றினார்.
