பெரியார் விடுக்கும் வினா! (2125)

1 Min Read
- Advertisement -

கவலை இல்லை!

எனக்கு இந்த விதமான – உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலை இல்லாத – திராவிட மக்களிடத்திலே நல்ல பேர் வாங்க வேண்டுமென்கிற கவலை சிறிதாவது உண்டா? இல்லை. அப்படிப் போலி நல்ல பெயரின் மீது எனது வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிடர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும்; அதில் முதன்மையாகத் திராவிடன் இழிவு நீங்க வேண்டும் என்ற ஆசையும், கவலையுமே தவிர, ஒன்றுமே எனது கவலையாக இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை என்கின்றபோது என் வாழ்வைப் பற்றிய கவலை என்பது எனக்கு ஏதுமுண்டா?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *