குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து பில்கிஸ் பானு மேல்முறையீடு!

- Advertisement -

குஜராத் கலவரத்தின்போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். வழக்குரைஞர் மூலம் பில்கிஸ் பானு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடிப் பெற்ற வெற்றியை இழந்துவிட்டதைப் போல உணருகிறேன். குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதால், எனக்கும் என் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் சட்டப் போராட்டம் நடத்துவேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *