திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நேற்று (16.11.2026) மாலை வீட்டில் கைப்பேசியில் பேசிக் கொண்டே நடந்தபோது, சற்றும் எதிர்பாராமல், வேட்டி தடுக்கி விழுந்ததால், தலையில் சிராய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. பாதிப்பு ஒன்றும் இல்லை; ஒரு நாள் ஓய்வு எடுத்து, இல்லம் சென்றுவிடலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
நாளை (18.11.2026) இல்லம் திரும்புவார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
