விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகளைத் திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

1 Min Read
- Advertisement -

சென்னை,  நவ. 17- தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக போடப்பட்ட 600 வழக்குகளில் இருந்து 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது கடந்த செப்.2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த உத்தரவின்படி 2021 மே முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்பப் பெறுவது தொடர்பாக உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆசிரியர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து தற்போது ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *