அமைச்சர் விழாவில் ஏற்பட்ட மின்தடைக்கு அதிகாரியைப் பழிவாங்குவதா? தங்கம் தென்னரசு கண்டனம்!

- Advertisement -

சென்னை, நவ. 17- மின் தடைக்கு அதிகாரி மீது பழிவாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள த.வெ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இள-மின் பொறியாளர் அ.அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படு வதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார். தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ‘மின்வெட்டா’ என்பதையெல்லாம் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுதான் பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்கவேண்டும்.

ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

அண்ணாதுரை திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அரசு ஊழியர் ஒருவரின் பணித்திறன் மற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்தத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரசிச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல், அவற்றைத் திசை திருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

எனவே, இளமின் பொறியாளர் அ.அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்ட தற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *