மின் வாரியக் களப்பணியாளர் தகுதித் தேர்வில் பெண்களும் கம்பம் ஏறிச் சாதனை!

2 Min Read
- Advertisement -

கோவை, நவ.16- கோவையில் மின் களப்பணியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், பெண்கள் மின்கம்பத்தில் ஏறியும், இரும்புத் தளவாடங்களைத் தூக்கிச் சென்றும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

அதிலும் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு பெண்ணும் கம்பத்தில் ஏறி, ஆண்களுக்கு நிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் களப்பணியாளர் பணிக்கான முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கோவை டாடாபாத்தில் உள்ள மின் பகிர்மானக் கழக அலுவலக வளாகத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 356 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் தேர்வுக்கு 150 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 59 பெண்கள் உட்பட 139 பேர் பங்கேற்றனர்.

இந்தத் தேர்வில் இரும்புத் தளவாடங்களைத் தூக்கிச் செல்வது, பழுது பார்க்கும் கருவிகளை இடுப்பில் கட்டிக்கொண்டு மின்கம்பத்தில் ஏறுவது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றன. மின்கம்பத்தில் கால் வைப்பதற்கான கருவியைப் பொருத்தி, இடுப்பில் கயிற்றைக் கட்டிய பின் கீழே இறங்க வேண்டும்.

இந்தப் பணிகளை எட்டு நிமிடங் களுக்குள் முடிப்பவர்கள் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப் படுவார்கள். தப்பித் தவறி அவர்கள் கீழே விழுந்தாலும் காயங்கள் ஏற்படாதவாறு, கீழே தேங்காய் நார்கள் மெத்தை போல் விரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுக்கு பவானி அருகே ஆப்பக்கூடல் ஊத்துப்பூண்டியை சேர்ந்த பெண் ஒருவர், தனக்குப் பிறந்த ஒரு மாதமே ஆன குழந்தையை தனது தாய், இணையரிடம் ஒப்படைத்துவிட்டு மின் கம்பம் ஏறும் தேர்வில் அசத்தினார். இது போன்ற ஆபத்தான மற்றும் சவாலான மின் களப்பணியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது ஆச்சரியமாக இருந்தது.

இவ்வாறு ஆபத்தான கம்பங்களை ஏறிய பெண்களின் திறமையை மாவட்ட ஆட்சியர்களும் மின்வாரிய உயரதிகாரி களும் பார்வையிட்டு அவர்களை பாராட்டினர்.

ஆண்கள் மட்டுமே சாதித்திட்ட பணியை முதன்முதலில் ஒரு பெண் சாதித்திட்டார். அதுவும் குழந்தை பெற்று ஒரு மாதம் ஆன நிலையில் என்பத ஈடற்ற சாதனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து, ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்ல என்று வென்று காட்டிய சாதனை ஆகும். மேலும், இது தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *