வாசிங்டன், நவ. 3– வரவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற இடைக் காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களுக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறு வோம். ஒருவேளை நாங்கள் தோற்று, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றால் எனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிப்பேன்,” என்று தெரிவித்தார்.
கேன்சாஸ் நகரில் நடைபெற்ற தனது 30ஆம் பிரசாரக் கூட்டத் தில் பேசிய டிரம்ப், தான் இல்லா விட்டாலும் தான்தான் தேர்தலில் நிற்பதாக நினைத்து மக்கள் குடி யரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாடாளுமன்றம் ஜனநாயகக் கட்சி வசம் சென்றால், தனது தலைமையிலான அரசின் சாதனைகள் அனைத்தும் முடக்கப் படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
