காரமடை, நவ. 15- தவெக நிர்வாகி மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டின் பேரில், 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி. அதே பகுதியில் தவெக ஊராட்சி செயலாளராக இருந்த பெண் நிர்வாகி, ஒருவர் அண்மையில் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டார்.
சட்டமன்றத் தேர்த லுக்கு பின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பாலியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் கருப்பசாமி துன்புறுத்தினார், சிலர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர், நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.11.2026 அன்று புகார் அளித்தார்.
புகாரையடுத்து, பெண் நிர்வாகி வீட்டுக்கேச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தற்போது, கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
