லிமா, நவ. 14- சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க கலாச்சாரம் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுப்பதாக போப் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ஆணும் பெண்ணும் சமமான கண்ணியமும் பொறுப்பும் கொண்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
தென் அமெரிக்கா நாடுகளுக்கு போப் லியோ அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பெரு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற் கொண்டுள்ள போப் லியோ, அங்கு நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் லிமாவில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ”சமூகத் தில் நிலவும் ஆணாதிக்கக் கலாச்சாரம் மற்றும் குடும்பப் பொறுப்புகளிலிருந்து ஆண்கள் விலகியிருப்பது போன்றவை பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிவகுப்பதாகும். ஆணும் பெண்ணும் சமமான கண்ணியமும் பொறுப்பும் கொண்டவர்கள்.
சமூகத்தில், நமது பாட்டிகள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களாக இருக்கக்கூடிய பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகள் ஒட்டுமொத்த மனிதக்குலத்தையும் காயப்படுத்தும் மோசமான செயலாக உள்ளது.
அதே நேரத்தில், ஏழைப் பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஆப்பிரிக்க-பெருவியன் பெண்கள் சமூகத்தில் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் சம்பவம் பெரும் கவலை அளிக்கிறது. விசுவாசிகள் மட்டுமின்றி நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இணைந்து பெண்களை மதிக்கவும், சிறுமிகளைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.
வாடகைத் தாய் முறை
கிரிமினல் குற்றம்: சீனா அறிவிப்பு
பெய்ஜிங் நவ. 14- சட்டவிரோத மாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி மய்யங்கள் குறித்த புகார் களைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறையை கிரிமினல் குற்றமாகச் சீன அரசு அறிவித்துள்ளது.
அனைத்து வகையான வாட கைத் தாய் முறைகளுக்கும் சீனா கடுமையான தடை விதித்துள்ள தாகவும், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்வது நெறிமுறைகளை மீறும் குற்றவியல் செயலாகக் கருதப்பட்டுக் கடுமையான சட்டத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணை யத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் ஜின்ருய் தெரிவித்துள்ளார்.
வாடகைத் தாய் ஒப்பந்தங்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் கிடையாது என்றும், இதில் ஈடுபடு வோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநகரான சாங்ஷாவில் சட்டவிரோதமாக இனப்பெருக்க உதவி மய்யங்கள் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக் காகப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக சீன அரசு ஊடக மான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 2001-ஆம் ஆண்டு முதல் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வாடகைத் தாய் முறையில் ஈடுபட சீனா தடை விதித்திருந்தது. வாடகைத் தாய் முறை பெண்களின் உடல்நலம் மற்றும் உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவ தாகவும், பெண்களின் உடலை வணிகமயமாக்கி அவர்களை குழந்தை பெறும் கருவிகளாக மாற்றி மனித மாண்பைக் குறைப்பதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரி வித்துள்ளது.
மேலும், முறையற்ற வாடகைத் தாய் நடைமுறை களால் கர்ப்பகால சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பற்ற மருத்துவ சிகிச்சைகளால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் குறித்தும் சுகாதார ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில்
அய்ரோப்பா பங்கேற்க ரஷ்யா சம்மதம்
மாஸ்கோ, நவ. 14- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கான அடுத்தகட்ட அமைதிப் பேச்சில் அய்ரோப்பிய பிரதிநிதிகள் பங்கேற்க ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷ்ய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புதினை அவரின் கிரெம் ளின் மாளிகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கடந்த 12.11.2026 அன்று சந்தித்துப் பேசினா்.
இச்சந்திப்பில் அய்ரோப்பிய யூனியனுடன் பேச்சு நடத்த ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என்றும், அவா்கள்தான் பேச்சைத் துண்டித்தனா் என்றும் புதின் குறிப்பிட்டார். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனுக்குள் மேற்கத்திய படைகளை அனுப்பும் அய்ரோப்பாவின் திட்டம், எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அது மீண் டும் போர் வெடிக்க வழிவகுக்கும்’ எனவும் அவா் எச்சரித்தார்.
மாஸ்கோ பயணத்தைத் தொடா்ந்து அயா்லாந்து தலைநகா் டப்ளினுக்குச் சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகள், அங்கு அய்ரோப்பிய உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்தனர்.
அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய ஸ்டீவ் விட்காஃப், ‘எங்கள் கூட்டாளிகளான அய்ரோப்பிய நாடுகள் அடுத்தகட்டப் பேச்சில் இணைவது மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்’ என்று தெரிவித்தார். அமைதிப் பேச்சில் அய்ரோப்பா பங்கேற்பதை வரவேற்றுப் பேசிய ஸெலென்ஸ்கி, போர் நிறுத்தம் மற்றும் பதற்றத்தைத் தணிப்பதற்கான செயல்திட்டங்கள் அதில் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம், ரஷ்யாவுடன் இணைந்து புதிய அய்ரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கு குறித்து அமெரிக்கா விவாதிக்கும் அணுகுமுறை சற்று வினோதமாக உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
