அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000 உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.5,000 உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள்: இக்கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த நவம்பர் 1ஆம் தேதி (01.11.2026) முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

அரசின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 9,646 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த ஊதிய உயர்வால் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *