கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப் 23 தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிறை வேற்றியுள்ள தீர்மானத்துக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரச மைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலி யுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியமைக்காக பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு 22.4.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகிற போது, இச்சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட கிறிஸ் தவ மக்களும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய ஒரு மாநாட்டை நடத்தி அதில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறபோது, தேர்தல் ஆதாயங்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற முதலமைச் சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ் கிறார் என்றும், இவ்வரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் தேவா லயப் பணியாளர்களுக்கு வாரியம் அமைத்தது, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற பல் வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி யதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவருக்காக இவ்வரலாற்று சிறப்பு மிக்க தீர்மா னத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக அனைத்து கிறிஸ் தவர்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தாழ்த்தப் பட்ட கிறிஸ்தவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான் பேசுகிற போது, தாழ்த்தப்பட்ட கிறிஸ் தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்த்து அவர் களுக்கும் சட்டபூர்வ மான உரிமைகளை பாதுகாப்பை, இட ஒதுக்கீடை வழங்க வேண்டும் என்று மிகத் தெளிவாக, வலுவாக எடுத் துரைத்து, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர் களின் துயரை துடைத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அர சினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமுதாயம் என்றும் கடமைப் பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் பேசும்போது, நம் எல் லோருக்கும் ஒரு புது நம்பிக்கையை, புது விடியலை கொடுக்கின்ற விதத்திலே, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும் பட்டி யலினத்திலே சேர்க்கப்பட வேண்டும், அவர்களுக்கு மற்ற பட்டியலினத்த வருக்கு கிடைக்கின்ற உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மைக்காக அனைவருடைய சார்பாகவும் முதலமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் பெர்னான்டஸ் ரத்தின ராஜா பேசுகிறபோது, வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசிற்கு தமிழ்நாட்டிலிருந்து அழுத்தம் வருகின்ற பொழுது, திராவிட மாடல் ஆட்சியில் இருந்து அழுத்தம் வருகின்ற பொழுது, அது வெற்றியாக முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை என்று தெரிவித்து தனது நன்றியை முதலமைச் சருக்கு தெரிவித்துக் கொண்டார் என அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *