உற்ற தோழமை அவர்!
உள்ளத்தில் எதையும்
மறைக்கத் தெரியாத
வெள்ளை உள்ளம் அவர் !
கண்கள் கலங்கி
குரல் கம்மி
அழுதுகொண்டே
சொன்னார் அவர்..
” வயலில் கோவணம்
கட்டி உழுது தான்
என்னைப் படிக்க
வைத்தார் என் அப்பா
உயர் நிலைக்கு வந்தேன்
ஆனால் ஒரு நேரம்
அவருக்கு நான் என்
வீட்டில் உணவு அளிக்க
இயலா நிலைமை…
வீட்டிற்குத் தெரியாமல்
உதவிகள் செய்தேன் எனினும்
வயதான காலத்தில் என்
வீட்டில் வைத்து அவரைப்
பார்க்க இயலாமல்
போய்விட்டது.. அவ்வகையில்
பெரும் கோழை நான்..
அப்பா அப்பா என
அழுது தீர்க்கிறேன்
தனிமையில். நான்.”
என்றார் அவர்
“எனது இயலாமைக்கு பரிகாரமாய்
மகாளய அமாவாசை நாளில்
அப்பாவுக்கு நான்
தர்ப்பணம் செய்யப்
போகிறேன்” என்றார் அவர்
அவருக்குள் இருக்கும்..
குற்ற உணர்வு
புரிந்தது எனக்கு..
ஆறுதலாய்ச் சில
சொற்களை சொன்னேன்..
நாம் பாடுபட்டு சேர்த்த
பணத்தை உழைக்காமல்
பறிக்க பார்ப்பனர்கள்
“காக்காய்க்கு
உணவு வை –
அது உனது முன்னோர்…
தர்ப்பணம் செய் –
அது உன்
பாவம் போக்கும்..
பரிகாரம் தரும் “ என்று
தந்திரப் பார்ப்பனர்கள்
கர்மா என்றும்
ஆத்மா என்றும் அளந்து
விட்டு நம்மை ஏய்க்கிறார்கள்..
அறிவியலுக்குப் புறம்பான
கதைகளை வகைவகையாய்
வாட்சப்களில் உலவ விடுகிறார்கள்!
மகாளய அமாவாசை மகிமை என
புரியும் மொழியில் பேசியும்
புரியாத மொழியில் ஏதேதோ
மந்திரங்களும் சொல்லியும்
ஏய்க்கிறார்கள் நம்மை!
தங்கள் தந்தை பெயரில்
முதியோர்கள் சிலருக்கு
உணவு அளியுங்கள்..
உங்கள் ஊர்ப் பள்ளிகளில்
படிக்கும் பிள்ளைகளுக்கு
தந்தையின் பெயரால்
உதவி செய்யுங்கள்…
அவர்கள் மன நிறைவு
வாழ்த்துகளால் தங்கள்
தந்தை பெயர் என்றும்
நிலைக்கட்டும் !
தங்களின் குற்ற
உணர்வும் நீங்கட்டும் என்றேன்…
– வா.நேரு
