தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி நவ. 13- ஒருவர் தனது தந்தையின் பரம்பரை சொத்து அல்லது தானே சுயமாக சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே முழு உரிமையாளராக இருக்க முடியும். மேலும், அந்த சொத்துகளை தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தையின் சொத்தில் உரிமை கோரி, அவரது மகன் தொடர்ந்த 29 ஆண்டு கால சட்டப் போராட் டத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.

தன்னுடைய தந்தைக்கு பரம்பரை சொத்திலிருந்து கிடைத்த பங்கில் உரிமை கோரி மகன் கடந்த 1997ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகனின் மகன், பரம்பரை சொத்தில் நேரடியான பங்குதாரராக இருக்க முடியாது, தந்தைக்கு, தாத்தா பிரித்துக் கொடுத்த சொத்தில், பேரனால் உரிமைக்கோர முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொத்துகள் பற்றி உயில் எழுதாமல் இறக்கும்பட்சத்தில், வாரிசுரிமை விதிகளை வரை யறுக்கும் சட்டப்பிரிவு 8-அய்க் குறிப்பிட்டு, ஒரு மகன் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட சொத்தின் முழு உரிமையாளராக மாறுகிறான் என்றும், அதே வேளையில் அவனது சொந்த மகனுக்கு அந்தச் சொத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடியான வாரிசுரிமை என்பது மகனை மட்டுமே குறிக்கும், மகனின் மகனை எந்த வகையிலும் வாரிசுரிமை பெற்றவர் என குறிப்பிட முடியாது, எனவே, தாத்தாவின் சொத்தில், பேரன் எந்த வகையிலும் உரிமைகோர முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *