தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

- Advertisement -

சென்னை, நவ. 13- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 மே 22, 23ஆம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் தரக்கோரி முதலமைச்சரிடம் முறையிட்டனர். அதை பரிசீலனை செய்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி வழங்கப்படவுள்ளது.

படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.10 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *