மோடியை கேள்வி கேட்ட நார்வே பெண் செய்தியாளரின் இந்திய விசா கடைசி நேரத்தில் ரத்து

- Advertisement -

ஸ்டால்க்ஹோம், நவ. 11- நார்வேயின் முன்னணி நாளிதழான ‘டாக்சாவிசன்’ பத்திரிகையின் செய்தியாளர் ஹெல்லே லிங் ஸ்வென்ட்சன்  என்ற பெண் இந்தியாவுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

அய்தராபாத்தில் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் ‘பாரத் உச்சி மாநாட்டில்’, ஊடகங்களின் எதிர்காலம், பத்திரிகை சுதந்திரம் குறித்து உரையாற் றுவதற்காக ஹெல்லே லிங் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு முறை யான இந்திய விசாவும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின்  அரசியல் அனுமதியும் முன்னதாகவே வழங்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நவம்பர் 11ஆம் தேதி அவர் இந்தியா வருவதற்காக விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அவரைத் தொடர்புகொண்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்தியாவுக்குப் பயணிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசா ரத்து செய்யப்பட்ட தைத் தொடர்ந்து சமூக வலை தளமான ‘எக்ஸ்’ (X) தளத்தில் காணொளி வெளியிட்டுள்ள ஹெல்லே லிங் ஸ்வென்ட்சன், ‘இது ஒரு பழிவாங்கும் நட வடிக்கை’ என்று குற்றம் சாட்டி யுள்ளார்.

கடந்த மே 2026இல் பிரதமர் நரேந்திர மோடி நார்வேக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்நாட்டுப் பிரதமருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஹெல்லே லிங் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடியிடம், “உலகின் மிகச் சுதந்திரமான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதிலளிப்பதில்லை?” என்று அவர் எழுப்பிய கேள்வி பன்னாட்டு அளவில் கவனம் பெற்றது. மேலும், இந்திய அரசின் செயல்பாடுகள், பிரபல தொழிலதிபர்கள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

“மே மாதம் பிரதமர் மோடி யிடம் பத்திரிகை சுதந்திரத்தைப் பயன்படுத்தி கேள்வி எழுப்பியதற்காகவே பழிவாங்கும் நடவடிக்கையாக எனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று ஹெல்லே லிங் தனது காணொளியில் குறிப் பிட்டுள்ளார். மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, தன்னை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹெல்லே லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வக் காரணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகமோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ இதுவரை பொதுவெளியில் வெளி யிடவில்லை.

அதே சமயம், 2025ஆம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்  பிரிவு 7இன் கீழ், வெளிநாட்டினரின் வருகையைத் தடை செய்யவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாவை எந்த நேரத்திலும் ரத்து செய்யவும் ஒன்றிய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 7 அய் முதல் முதலாக ஊடகவியலாளருக்காகப் பயன்படுத்திய உள்துறையின் இந்த நடவடிக்கை பன்னாட்டு ஊடகவியலாளருக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற் படுத்தி உள்ளது.

பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினால் ஊடகவியலாளர் ஹெல்லே லிங் விசா கடைசி நிமிடத்தில் ரத்து செய்ததற்கு எடிட்டர் கில்ட் ஆஃப் இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *