கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் காப்பாளரும், ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆகிய முனைவர் ம.சுப்பராயனின் இணையர் அன்புமணி (வயது 67), உடல் நலக்குறைவால் நேற்று (12.11.2026) பிற்பகல் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்புமணி சுப்பராயன், இணையர் ம.சுப்பராயன் அவர்கட்கு கழகப் பணி செய்ய உற்றதுணையாக விளங்கியவர். மகன் சு.சதீஸ்குமார் (கப்பல் பொறியாளர்), மகள் சு.கவிதா உதவிப் பொறியாளர் (மி.வா.) ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடத்த உறுதுணையாக இருந்தவர். பெரியார் உலகத்துக்கு மகனின் திருமணம் (13.11.2013) அன்று இருபத்தையாயிரமும், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்டெடுப்பு என நடந்த கழகப் பொதுக்கூட்டம் (16.12.2025) அன்று ஒரு இலட்சத்து பத்தாயிரமும் கொடுக்க உதவியாக இருந்தவர்.
– – – – –

அருப்புக்கோட்டை நகர பகுத்தறிவாளர் சிவ.பன்னீர் செல்வத் தின் இணையர், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கு.குருவம்மாள் (வயது 84) உடல்நலக் குறைவு காரணமாக 11.11.2026 அன்று மாலை 5 மணியளவில் மறைவுற்றார்.
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், துணைச் செயலாளர் இரா.அழகர், நகரச் செயலாளர் பா.இராசேந்திரன், கவிமாமணி ஆயை.மு.காசாமைதீன், டாக்டர் வெண்ணிலா, க.எழிலன், ஒன்றியத் தலைவர் முத்துக்குமார், இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.
கெங்கவல்லி வெ.நச்சினார்கினியன் மறைவு
கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

ஆத்தூர் கழக மாவட்டம் கெங்க வல்லி பெரியார் பெருந்தொண்டர் வெ.நச்சினார்கினியன் (வயது 79) (ஆசிரியர், ஓய்வு) 11.11.2026 அன்று காலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
வெ.நச்சினார்கினியன் இளமைக் காலம் தொட்டே தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை துணிவுடன் பேசியவராவார். பள்ளிகளில் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பி வந்தவர். அவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி பெருமை சேர்த்தவர். இவரின் செயல்பாடுகள் மிகச் சிறப்பானவை. கழகக் களப்பணி செய்தவர்.
இவரின் இறப்புச் செய்தியை அறிந்து கழகத் தோழர்கள் மாவட்டக் கழகக் காப்பாளர் இரா. விடுதலை சந்திரன் மாவட்டச் செயலாளர் நீ.சேகர், ஆத்தூர் நகரத் தலைவர் வெ.அண்ணாதுரை, ப.க. மேனாள் மாவட்ட பொறுப்பாளர் ந.விஜய்ஆனந்த், ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெ.நச்சினார்க்கினியன் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.
மகள் எழிலரசி, மகன் புரட்சிராசன் மற்றும் உற்றார் உறவினர்களைச் சந்தித்து கழகத்தின் ஆறுதலைத் தெரிவித்தனர். இறுதி நிகழ்வு நேற்று (12.11.2026) மாலை 4 மணியளவில் ஆத்தூர் மின் மயானத்தில் நடைபெற்றது.
புரட்சிராசனின் தொடர்பு எண்: 9566066046.
