தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள லஞ்ச ஒழிப்புத்துறையில் மேலும் ஒருவர் வாக்குமூலம்!

- Advertisement -

திருவனந்தபுரம், நவ. 13 மலேசிய பொறியாளர் லீ சி பென் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தற்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமா ருக்கு எதிராக கேரள லஞ்ச ஒழிப்புத் துறையில் மேலும் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார், கடந்த 2005 ஆம் ஆண்டு கேரள மாநில பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில், கேரள மாநில போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் – அங்கமாலி இடை யிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை ‘பதி-பெல்’ என்ற மலேசிய- இந்திய கூட்டு நிறுவனம் மேற்கொண்டது. இத்திட்டத்தின் தலைமைப் பொறி யாளராக மலேசியாவைச் சேர்ந்த லீ சி பென் பணியாற்றி வந்தார்.

அப்போது, சுமார் ரூ.17 கோடி மதிப்பிலான பணிகளுக்கான பில்களை அனுமதிப்பதற்கு ஞானேஷ் குமார் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாகவும், லஞ்சம் கொடுக்காததால் பில்களை நிறுத்தி வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மலேசியா திரும்பிய லீ சி பென் தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு குறித்து அப்போது குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க கேரள அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, கேரள லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசார ணையைத் தொடங்கியுள்ளது.

லீ சி பென்னுடன் பணிபுரிந்த ஒப்பந்ததாரர் சாஜன் என்பவர் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தி ருந்தார். அதில், ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டது தனக்குத் தெரியும் என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் லீ சி பென் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உதவியாளர் ஷாஜகான் வாக்குமூலம்

இதன் தொடர்ச்சியாக, லீ சி பென்னி டம் உதவியாளராகப் பணியாற்றிய ஷாஜகான் என்பவரும் நேற்று (12.11.2026) லஞ்ச ஒழிப்புத்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஞானேஷ் குமார் லஞ்சம் கேட்டதாக லீ சி பென் தன்னிடம் கூறியதாகவும், நிலுவையில் உள்ள தொகைக் கிடைக்காததால் திட்டப் பணிகள் முடங்கிவிடுமோ என அவர் மிகுந்த கவலைப்பட்டதாகவும் ஷாஜகான் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் வாக்குமூலம் அளித்து வருவது கேரள அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *