தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கும் சட்டம் –ஒழுங்கு கடலூர் மாவட்டத்தில் ஏழு பெண்கள் உட்பட 12 பேரை காணவில்லை

- Advertisement -

கடலூர், நவ.13-  கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (11.11.2026) ஒரே நாளில்
7 இளம் பெண்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போனது குறித்து காவல் துறையினர் விசாரிக் கின்றனர்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த பள்ளி நீரோடையைச் சேர்ந்த தண்டபாணி மகள் ஜெனி (19), குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் மகள் மதுமிதா (18), சிதம்பரம் அடுத்த வைப்புச்சாவடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி தேவி (21), கடலூர் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தைச் சேர்ந்த கொடியரசன் மகன் விஜயசிறீ (25), சேத்தியாதோப்பை அடுத்த கொண்ட சமுத்திரத்தைச் சேர்ந்த திவாகர் மனைவி சுஷ்மிதா (26), பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தைச் சேர்ந்த ஹரிவாகசன் மகள் அஸ்வினி (22), கடலூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், விருத்தாசலத்தைச் சேர்நத 17 வயது சிறுமி ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.

இதுதவிர, ராமநத்தத்தைச் சேர்ந்த மதியழகன் (22), புதுப்பேட்டையைச் சேர்ந்த குகன் (28), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கரிகாலன் (35), தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்வளவன் (30 ஆகியோரும் காணாமல் போயுள்ளனர். ஒரே நாளில் ஒரு மாவட்டத்தில் இருந்து 7 இளம் பெண்கள் உள்பட 12 பேர் இப்படிக் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனித்தனியே அந்தந்த காவல்நிலையங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *