திருச்சி, ஆக.21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி Emmchak Formulations Pvt. Ltd நிறுவனத்துடன் 18.08.2026 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை மற்றும் Emmchak Formulations Pvt. Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியன் மற்றும் இயக்குநர் கோபி ஆகியோர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான கல்வி, தொழிற்சாலைகளில் நேரடி செயல்முறை பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான செயல்பாடுகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இதன் மூலம் மருந்து தயாரிப்புக்கள், தர மேலாண்மை, விற்பனை மற்றும் கண்டுபிடிப்புக்கள் சார்ந்த மருந்தியல் அறிவை மாணவர்கள் பெறுவதோடு, தொழில் பயிற்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் இவ்வொப்பந்தம் வழிவகுக்கும்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

