உயர் நீதிமன்றங்களுக்கிடையே உயர்வு, தாழ்வு இல்லை உச்சநீதிமன்றம்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 12- பெங்களூருவைச் சேர்ந்த சிறீலட்சுமி சிறீனிவாசா அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக வழக்கை டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இதனை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி எதிர் மனுதாரர்களான சென்னையைச் சேர்ந்த சாய் மகாலட்சுமி டிரேடர்ஸ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை மாற்றி உத்தரவிடக்கூடாது என எதிர்மனுதாரர் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ”ஒரு குறிப்பிட்ட வகையான வழக்கை விசாரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட உயர் நீதிமன்றம் மற்றவற்றை விடச் சிறந்தது என்று கருதுவது தவறானது. உயர் நீதிமன்றங்களுக்கு இடையே உயர்வு தாழ்வு கிடையாது” என்றனர். ஆனாலூம் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *