அரசுப் பணியாளர்கள் இனி மின்சாரக் கார்களையே வாங்க வேண்டும் : ஒன்றிய அரசு உத்தரவு

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 12- கார்பன் உமிழ்வு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசுப் ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாற்ற ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் தகவ லின்படி, நமது நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்து துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதம் இறக்கு மதி மூலமே பூர்த்தி செய்யப் படுகிறது. எனவே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்கவும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ பயன்பாட்டு கார்களாக இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார் களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. அரசு அலு வலகங்களில் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் இந்த முடிவு, நாட்டின் வாகன துறையில் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக ஒன் றிய செலவின துறை வெளி யிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள், தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் கார்கள் பழுதடைந்து மாற்றப் படும்போதோ அல்லது பயன்பாட்டில் இருந்து ஓய்வு கொடுக்கும்போதோ அவற்றுக்கு பதிலாக மின்சார கார்களையே வாங்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு பதிலாக பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்க விரும்பும் துறைகள், அதற்கான காரணங்களை விளக்கி விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய செலவின துறையிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

மின்சார வாகனங்களின் கொள்முதலுக்கான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் இரண்டு வகையான எரி பொருட்களை பயன்படுத்தும் கலப்பின கார்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உள் ளது. வாகனங்களின் விலை, அவற்றின் பயன்பாட்டுக்கான பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *