இந்தியா வருவதற்கான விசா பிரிவுகள் குறைப்பு விண்ணப்ப நடைமுறைகள் எளிமையாக்கம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.12 இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில், விசாக்களின் முக்கியப் பிரிவுகள் 13-இல் இருந்து 9 ஆகவும், துணைப் பிரிவுகள் 49-இல் இருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், மருத்துவச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை அதிகரிப்பதோடு, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசா நடைமுறை நடப்பாண்டின் இறுதிக்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விசா பிரிவுகள் மற்றும்
முக்கிய மாற்றங்கள்

9 பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ள விசாக்களில் வியாபாரம், தூதரகம், வேலைவாய்ப்பு, செய்தியாளர், மருத்துவம், அதிகாரப்பூர்வ விசா, மாணவர் விசா, பார்வையாளர் மற்றும் இதர விசாக்கள் ஆகியவை அடங்கும். இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் நீண்ட கால விசா சார்ந்தவர்களும் உள்ளடங்குவர்.

விண்ணப்பதாரர்களின் நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கும் வகையில், விசா விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்படும் தகவல்களின் அளவு 65% முதல் 70% வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது 13 துணைப் பிரிவுகளின் கீழ் மின்னணு பயண அங்கீ காரம் மூலம் இ-விசா (e-Visa) சேவையை வழங்கி வருகிறது. இந்த வசதி உலகின் 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்குக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறப்புக் கூடுதல் சுற்றுக்குப் பின்னரும் நாடு முழுவதும் 411 எம்பிபிஎஸ்
இடங்கள் காலி

தமிழ்நாடு

புதுடில்லி, நவ.12 மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான சிறப்பு கூடுதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரும், நாடு முழுவதும் 411 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்றிய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதற்கட்ட இணைய வழி கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதியும் தொடங்கியது. தொடக்கத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்பின.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நான்கு சுற்று கலந்தாய்வுகள் நடத்திய பிறகும் இடங்கள் காலியாக இருந்ததால், அய்ந்தாவதாக ‘சிறப்பு கூடுதல் சுற்று’ நடத்தப்பட்டது.

மொத்த இடங்கள்: சிறப்புக் கூடுதல் சுற்றில் மொத்தமிருந்த 948 இடங்களில், இதுவரை 537 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 411 இடங்கள் (43.4%) காலியாக உள்ளன.  அனைத்து சுற்று கலந்தாய்வுகளும் முடிவடைந்த நிலையில், நிரப்பப்படாமல் உள்ள இந்த 411 இடங்களும், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலேயே காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கூடுதல் சிறப்பு கலந்தாய்வு முடிவில் நாடு முழுவதும் 60 முதல் 70 இடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *