கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.11.2026

3 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஓவைசி – ஆசாத் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கத் திட்டம்: அசாதுதீன் ஓவைசியின் ஏ.அய்.எம்.அய்.எம். (AIMIM) மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி இணைந்து உத்தரப் பிரதேச தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளன; தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைக்க 150 தொகுதிகளில் கவனம் செலுத்த உள்ளன.

* காங்கிரஸ் பாரத் உச்சி மாநாட்டில் 70 நாடுகள் பங்கேற்பு – ராகுல், ரேவந்த் நவம்பர் 14இல் உரை. அய்தராபாத்தில் நவம்பர் 13, 14 தேதிகளில் நடைபெறும் இரண்டாவது காங்கிரஸ் பாரத் உச்சி மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்; நிறைவு நிகழ்வில் ராகுல் காந்தியும் முதலமைச்சர் ரேவந்த்தும் உரையாற்றுகின்றனர்.

* தெலங்கானாவில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பாஜக சதி செய்வதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, எந்தச் சூழலிலும் சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது என்றும், பாஜகவை எதிர்க்கும் வலிமை காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* விவசாயிகள் ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்; மீதமுள்ள காலத்தில் சீட்டாடியும் மது அருந்தியும் பொழுதைக் கழிக்கிறார்கள் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா சர்ச்சைப் பேச்சு. இக்கருத்துக்கு விவசாய அமைப்புகளும் காங்கிரஸும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தனது வார்த்தைத் தேர்வுக்கு அவர் மன்னிப்புக் கோரினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைவது குறித்தப் பேச்சுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சுனேத்ரா பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 22 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து பிரிந்து செல்ல வாய்ப்புள்ளதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் பேட்டி. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சரத்பவாரை சந்திப்பது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு அல்ல; அதன் பின்னணியில் அரசியல் மாற்றங்கள் இருக்கலாம் என சஞ்சய் ராவத் சூசகமாக தெரிவித்தார்

தி இந்து:

* எஸ்.சி./எஸ்.டி. இடஒதுக்கீடு உயர்வை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக கருநாடக அரசு மேல்முறையீடு. எஸ்.சி. இடஒதுக்கீட்டை 17% ஆகவும், எஸ்.டி. இடஒதுக்கீட்டை 7% ஆகவும் உயர்த்தியது 50% உச்சவரம்பை மீறுவதாக கூறி உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தி டெலிகிராப்:

* அய்.அய்..டி,க்களில் பார்ப்பனீய கலாச்சாரத் திணிப்பா? அய்அய்டிகளில் புலால் உணவுக்கு தடை, தனித்தனி உணவருந்தும் இடங்கள்: தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுவதாகப் புகார். ஹிந்து பண்டிகைகளின் போது விடுதி உணவகங்களில் புலால் உணவுக்கு தடை விதிப்பதும், மரக்கறி உணவாளர்களுக்கு தனி இருக்கை ஏற்பாடுகளைச் செய்வதும் ஜாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இது அய்.அய்..டி,க்களில் பார்ப்பனீயக் கலாசாரத் திணிப்பா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “95 சதவீதம் பேர் துன்பப்படுகின்றனர்; 5 சதவீதம் பேர் சுரண்டுகின்றனர்” – உத்தரப் பிரதேசத் தேர்தல் இனி 80:20 (ஹிந்து – முஸ்லிம்) என்ற விகிதத்தில் இல்லை; துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படும் 95 சதவீத மக்களுக்கும், அவர்களைச் சுரண்டும் 5 சதவீதத்தினருக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது என்று அகிலேஷ் தெரிவித்தார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *