புதுடில்லி, நவ. 12 அயோத்தி ராமன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கை களில் முறைகேடு நடந்துள்ளதாகத் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது மிகப்பெரிய “நம்பிக்கைத் துரோகம்” என்று வர்ணித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் மவுனம் காப்பதன் மூலம் திரு டர்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ள தாவது
கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தத் திருட்டை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் சந்தேகங்களை மேலும் அதி கரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நன்கொடைகள் திருடப்பட்ட இந்தச் ‘பாவச்’ செயலை மறைப்ப தற்கு முதல் நாளில் இருந்தே தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழு உண்மையும் வெளிவர வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அரசுக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்:
போதிய நடவடிக்கை இல்லையா? இந்த வழக்கில் வெறும் 8 பேர் மீது மட்டும் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்பட்டது போதுமானதா?
சுதந்திரமான விசாரணை தேவையா? அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதி மேலாண்மை குறித்து ஏன் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்படக்கூடாது? உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வை யில் மேலும் விசாரணை நடத்தி, இதில் பொறுப்புக்கூறலை உறு திப்படுத்துவதில் இருந்து அரசு ஏன் பின்வாங்குகிறது?
ராமன் கோயில் நிதி மேலாண்மை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன
