காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி – கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாள் இன்று (11-11-2004)
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாளில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் பிணை ஆணையின் மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றம் இவரது பிணை விடுவிப்பு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உச்ச நீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழ்நாடு உயர்நீதி மன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
சுயமரியாதைச் சுடரொளி
என். ஜீவரத்தினம் – பிறந்தநாள்

என். ஜீவரத்தினம் அவர்கள்
11 நவம்பர் 1911 அன்று பிறந்தார்.
மீனவர் தந்தை என்றும் சுயமரியாதைச் சுடரொளி என்றும் போற்றப்படுபவர். சென்னை மாநகராட்சி உறுப்பின ராகவும், மீனவர் தொழிற் சங்கத் தலைவராகவும் திறம்படச் செயல்பட்டவர்.
இயக்கப் பங்களிப்பு: தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களில் முன்னணிச் செயல்பாட்டாளராகப் பங்காற்றியவர்; சமூக சீர்திருத்தப் பரப்புரைகள் மற்றும் மாநாடுகளை முன்னெடுத்தவர்.
இதழியல் பணி: சென்னையிலிருந்து ‘டார்பிடோ’, தென்னாடு, மீனவன் ஆகிய இதழைகளை நடத்தி பகுத்தறிவு, சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பினார்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
