பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருமாம்! ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

- Advertisement -

புதுடில்லி, நவ. 11- நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. திருமணம், மணமுறிவு, வாரிசுரிமை, தத்து எடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வரும் நிலையில், அவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையைப் பின் பற்ற பொது சிவில் சட்டம் வழிவகை செய் வதாக பாஜக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த சட்டம் இந்தியா வின் பன்முகக் கலா சாரம் மற்றும் மதச் சுதந்திரத்தைப் (பிரிவு 25) பாதிக்கும் என்றும், சிறுபான்மையினரின் தனிநபர் சட்டங்களில் தலையிடுவதாக அமை யும் என்றும் எதிர்க் கட்சிகள் மற்றும் சில சிறு பான்மை அமைப்புகள் வாதிடுகின்றன. கோவா வில் சுதந்திரத்துக்கு முன் பிருந்தே பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது.

கோவாவுக்கு பிறகு, நாட்டிலேயே முதல் முறையாக பாஜக ஆளும் உத்தராகண்டில் கடந்த ஆண்டு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மையில் குஜராத் மற்றும் அசாம் மாநில சட்டப் பேரவைகளில் பொதுசிவில் சட்டம் தொடர்பான மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைகளுக் கான ஒன்றிய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: பொது சிவில் சட்டம் அரசியலமைப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது. மேலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் 44ஆம் பிரிவின் கீழ் அதற்கான ஒரு விதியைச் சேர்த்துள்ளனர்.

உச்ச நீதிமன்றமும் இவ்விஷயம் குறித்து பலமுறை கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சில மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்த முன்வந்திருப்பது ஊக்க மளிக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சியில் இல்லாத காலத்திலேயே நீண்ட காலமாக பொது சிவில் சட்டம் இருந்து வருகிறது.

பொது அரசியலமைப் புச் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண் டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் இந்த நோக்கத்துக்கு எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இதற்கு அரசியலமைப்பு அடிப்படை உள்ளது. மேலும், இதன் அமலாக்கம் ஒரு சில மாநிலங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் அதிகளவில் இடம்பெற்று வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *