காற்று மாசுக்கான காரணம்…! இரண்டு அமைச்சர்களின் கண்டுபிடிப்பு! ‘‘பட்டாசினால் காற்று மாசு என்று கூறுபவர்கள் ஸநாதன எதிரிகள்’’ டில்லி அமைச்சர் கபில் மிஸ்ராவின் கண்டுபிடிப்பு

1 Min Read
- Advertisement -

 

“தீபாவளி அன்று பட்டாசினால் காற்று மாசு ஏற்படவில்லை. பஞ்சாப் விவசாயிகள் விவசாயக் கழிவுகளைச் சரியாக தீபாவளி அன்று அதிகம் கொளுத்தினார்கள். அதனால்தான் டில்லியில் மாசு ஏற்பட்டது. ஹிந்து விரோதிகள் பட்டாசினால் காற்று மாசு ஏற்படுகிறது என்று ஸநாதனத்திற்கு எதிராக அறிக்கை விடுகின்றனர்’’ என்றார்.

‘‘காத்து வீசவில்லை,
இதனால் மாசு அதிகரித்து விட்டது’’

தமிழ்நாடு அமைச்சர் ராஜீவ்  கண்டுபிடிப்பு

சென்னையில் வரலாறு காணாத காற்று மாசு குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்ட போது ‘‘பட்டாசினால் காற்றுமாசு ஆனது என்று வதந்திகளைப் பரப்பக் கூடாது. பட்டாசினால் காற்று மாசு ஏற்பட்டது என்று எங்கே கூறப்பட்டுள்ளது?’’ என்று எதிர்க்கேள்வி வைத்த  அமைச்சர் “மழைக்காலம். காற்று ரொம்ப சோம்பேறியா, மெதுவா வீசுது. அதனாலதான் மாசு நகரத்தை விட்டுப் போகாமல் அப்படியே தங்கி விட்டது. ஆகையால் காற்று மாசு அதிகமாகத் தெரிந்துள்ளது. மேலும் வெளி ஊர்களுக்கு சொந்தக்காரில் அதிகம் பேர் சென்றதாலும், அதனால் ஏற்பட்ட புகையும் காற்று மாசுக்கு ஒரு காரணம் ஆகும்’’ என்ற

இதே தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ராஜீவ்தான், ‘‘நொய்யல் ஆற்றில் நுரைக்குக் காரணம் மக்கள் சோப்பு ஷாம்பு போட்டு குளிப்பதுதான்’’ என்று  கூறியவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *