அமெரிக்காவிலும் பார்ப்பனர்களின் ‘சித்து’ விளையாட்டு!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பெயரில் சிலர் பொதுச் சாலைகளில் விதிகளை மீறிப் பட்டாசுகளை வெடித்து, சாலையைக் குப்பைக் காடாக்கிய நிகழ்வு பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலர், தீபாவளியையொட்டி பொதுச் சாலைகளில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இதன் காரணமாக, சாலை முழுவதும் பட்டாசுத் துகள்கள், காகிதக் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து வழிந்தன. இந்த முறையற்ற கொண்டாட்டத்தினால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொது மக்களுக்கும், அருகிலிருந்த குடியிருப்புவாசிகளுக்கும் பெரும் இடையூறும் ஏற்பட்டது.
சாலைகளில் ஏற்பட்ட அசுத்தத்தையும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியதையும் அடுத்து, உள்ளூர் தீயணைப்புத் துறை உடனடியாகக் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சக்திவாய்ந்த குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சாலைகளில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உரிய அனுமதியின்றி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பொது இடங்களில் பட்டாசு வெடித்து பொது அமைதி மற்றும் விதிகளை மீறிய நபர்களை நகர தீயணைப்பு நிர்வாகம் மற்றும் சுகாதார அமைப்பு அடையாளம் கண்டது; அவர்களுக்கு எதிராகச் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, அங்குள்ள உள்ளூர் சட்டதிட்டங்களையும் பொது விதிகளையும் மதிக்காமல் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது இந்தியாவின் பெயரைக் கெடுக்கும் செயல் என இணையவாசிகளும் நெட்டிசன்களும் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்! வெளிநாடுகளில் கொண்டாட்டங்கள் என்றாலும், பொது இடங்களின் பாதுகாப்பையும் தூய்மையையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாற்றம் பிடித்த இந்து மதக் குப்பைகளை இந்தியாவில் அரங்கேற்றியது போதாதென்று, அமெரிக்கா போன்ற – குடியேறிய நாடுகளிலும் நெறிமுறையும் நாகரிகமும் இல்லாத தங்களின் ஆபாச கூத்துகளை அவிழ்த்து விடுவது – இந்தியர்களின் ஒழுங்கின்மையைத் தான் வெளிநாடுகளில் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலும் (14.9.2000), அமெரிக்காவின் செனட்டிலும் (12.7.2007) வேத மந்திரங்களை ஓத அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளே அருவருப்பானவை.
அதே போல 2025 பிப்ரவரியில் தேசிய பிரார்த்தனை நாளில் அமெரிக்கப் பிரதிநிதி அவை உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் காயத்ரி மந்திரத்தை ஓதினார்.
அமெரிக்காவில் குடியேறி வாழும் பார்ப்னர்களும், இந்துத்துவாவாதிகளும், தங்களுடைய பார்ப்பனிய கலாச்சாரத்தை அமெரிக்காவிலும் குடியேற்றி, விளையாட ஆரம்பித்ததாலும் தொடக்கத்தில் அமெரிக்கா இவற்றை எல்லாம் அனுமதித்ததாலும், இப்பொழுது இந்தியாவின் மானம் கப்பலேறுகிறது. வெட்கக் கேடு!
