தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் ஏக்கருக்கு ரூ.35,000 வழங்கக் கோரிக்கை

1 Min Read
- Advertisement -

தஞ்சாவூர், நவ. 11- தஞ்சாவூர் மாவட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 துயர் துடைப்புத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடை பெற்ற இச்சங்கத்தின் தெற்கு மாவட்டக் குழு நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் மாவட் டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 துயர் துடைப்புத் தொகை வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் தாமத மாக சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் சூழலில், பயிர்க் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றனர். எனவே, விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி பயன்பெறும் வகையில், எந்தவித நிபந்தனையுமின்றி விஏஓ-க்கள் பயிர்க் காப்பீட்டுக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

விவசாயப் பணிகள் தடையடைந்து வாழ்வாதாரம் இழந் துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலர் சோ. பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் கோ. சக்திவேல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மேலும், விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அ. பன்னீர்செல்வம், மாவட்டப் பொருளாளர் நா.சவுந்தரராஜன், மாவட்டத் துணைத் தலைவர்கள் அ. கலிய பெருமாள், சி.ஜெயராஜ், தி. திருநாவுக்கரசு உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *