டாக்கா, நவ. 11- முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர் கொள்வார் என்று அந் நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தெரி வித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் காரணமாக அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். வரும் டிசம்பரில் அவர் வங்க தேசம் திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக புதிய கடவுச் சீட்டு வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேசத் தூதரகத்துக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆனால் அவருக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க முடியாது, வங்கதேச நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை, இந்திய அரசு முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில் வங்க தேச அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டி யில், “வங்கதேச நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹசீனாவுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க முடியாது.
குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் படி தன்னை வங்க தேச அரசிடம் ஒப் படைக்குமாறு இந்திய அரசிடம் அவர் முறையிட வேண்டும். இந்த நடைமுறையின் மூலம் மட்டுமே அவர் வங்கதேசத்துக்கு திரும்ப முடியும். வங்கதேசத்துக்கு ஷேக் ஹசீனா திரும் பினால் அவர் மரண தண் டனையை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.
